Bhavani Varaar Inge Swami in Tamil

॥ Bhavani Varaar Inge Swami Tamil Lyrics ॥

॥ பவனி வர்றார் இங்கே ॥
பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா
வாவர் சாமி கூட வர்றார் சாமி ஐயப்பா

பவனி வர்றார் இங்கே சாமி சரணம் ஐயப்பா
வாவர் சுவாமி கூட வர்றார் சாமி ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே)

காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பா
ஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா
காவலர்கள் கூட வர்றார் சரணம் ஐயப்பா
ஆவலோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா

அம்பு வில்லும் கையிலேந்தி சுவாமி வருகிறார்
எம்பெருமான் துள்ளி துள்ளி ஆடி வருகிறர்
துன்பமெல்லாம் தீர்த்திடவே பவனி வருகிறார்
இன்பமோடு கும்பிடுவோம் சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே)

தந்தை தாயுமான சுவாமி பவனி வருகிறார்
வேதியர் சபை நடுவே சுவாமி வருகிறார்
பூதப்படைகளுடன் ஐயன் வருகிறார்
இத்தருணம் காத்திடுவார் சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே)

கடகடவென பீறி முழங்க சுவாமி வருகிறார்
கொட்டு வாத்தியம் முழங்கி வரவே ஐயன் வருகிறார்
கடகடவென பீறி முழங்க சுவாமி வருகிறார்
கொட்டு வாத்தியம் முழங்கி வரவே ஐயன் வருகிறார்
மாடன் சடையன் பொருளன் இருளன் சரணம் ஐயப்பா
ஓடி வரவே பவனி வர்றார் சரணம் ஐயப்பா
மாடன் சடையன் பொருளன் இருளன் சரணம் ஐயப்பா
ஓடி வரவே பவனி வர்றார் சரணம் ஐயப்பா (பவனி வர்றார் இங்கே)

மின்னல் போல ஒளி விளங்க சரணம் ஐயப்பா
பொன்னு மேனி கண்டிடவே சரணம் ஐயப்பா
மின்னல் போல ஒளி விளங்க சரணம் ஐயப்பா
பொன்னு மேனி கண்டிடவே சரணம் ஐயப்பா
தனிச் சிலம்பு சல்லடையும் சுவாமி ஐயப்பா
கலகலவென சலங்கை குலுங்க பவனி வருகிறார் (பவனி வர்றார் இங்கே)

கடும் பிணியின் கொடுமையினால் வருந்தும் பக்தரை
நொடிப்பொழுதில் பிணி அகற்றி காத்தருள் ஐயா
கடும் பிணியின் கொடுமையினால் வருந்தும் பக்தரை
நொடிப்பொழுதில் பிணி அகற்றி காத்தருள் ஐயா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதன் அகில வரதன் அபயம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதன் அகில வரதன் அபயம் ஐயப்பா
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா
ஹரிஹர சுதன் அகில வரதன் அபயம் ஐயப்பா

Bhavani Varaar Inge Swami in Tamil
Share this

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to top