Ganapathy Saami Ganapathiye Vinayagar Song Tamil Lyrics

॥ Ganesh Bhajans: கணபதியே சாமி கணபதியே Tamil Lyrics ॥

கணபதியே சாமி கணபதியே
கணபதியே சாமி கணபதியே

மூல முதற் பொருளே கணபதியே
முக்கண்ணன் தன் மகனே கணபதியே
கந்தனுக்கு முன் பிறந்த கணபதியே
காத்தருள வேண்டுமையா கணபதியே (கணபதியே)

வேல்முருகன் சகோதரனே கணபதியே
வினை தீர்த்த வித்தகனே கணபதியே
பார்வதியின புத்திரனே கணபதியே
பண்பு மனம் கொண்டவனே கணபதியே (கணபதியே)

தொந்தி வயிற்றௌனே கணபதியே
தொழுதிடவே வந்தோம் ஜயா கணபதியே
தும்பி முகம் கொண்டவரே கணபதியே
துணையாக வர வேண்டும் கணபதியே (கணபதியே)

மூஷிக வாகனனே கணபதியே
முன்னின்று காக்க வேண்டும் கணபதியே
பாசமுடன் ஓடிவந்து கணபதியே
பாதுகாக்க வேண்டுமய்யா கணபதியே (கணபதியே)

See Also  1000 Names Of Sri Ganapati – Sahasranamavali Stotram In Odia