Pamba Ganapathi Anbin Adhipathi In Tamil – பம்பா கணபதி அன்பின் அதிபதி

॥ Ganesh Bhajans: Pamba Ganapathi Anbin Adhipathi


பம்பா கணபதி அன்பின் அதிபதி
நன்மை அருள்கின்றாய்

அய்யன் மலை வரும் மாந்தரின்
இனத்தை வாழ்த்திட நீயுள்ளாய்
சாமி சோதரானாகின்றாய்-துயரினை
நீக்கியே காக்கின்றாய்

தடை என்ன வந்தாலும் உடைகின்ற தேங்காயாய்
கடும் பக்தி விரதத்தால் அவையாகும்.
அருளெனும் சொல்லுக்கே பொருளாக ஆகின்ற
அன்னையின் ரூபமே முன்னிற்கும்-கண்டு
பூப்போல கைகளும் வணங்கி நிற்கும்
த்ரேதா யுகம் கண்ட அவதார மாமன்னன்
சீதாபதி ராமன் இருக்கின்றான்
அழகிய ராமனின் அடபோற்றும் மாருதி
பக்தர்களின் ஒருவன்போல் நிற்கின்றான்
என்றென்றும் மாறாத பக்திக்கு அருள்கின்றான்

See Also  Hymn To Krishna As Nandakumar In Tamil