Suzhi Pottu Seyal Ethuvum Thodangu – சுழி போட்டு செயல் எதுவும்

॥ Ganesh Bhajans: Suzhi Pottu Seyal Ethuvum Thodangu Pillaiyar Suzhi Pottu Tamil Lyrics ॥

ஓரானைக் கன்றை உமயாள் திருமகனை
போரானைக் கற்பகத்தைப் பேணினால்
வாராத புத்தி வரும் வித்தை வரும்
புத்திர சம்பத்து வரும்
சக்தி தரும் சித்தி தரும் தான்

சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

அழியாத பெருஞ்செல்வம் அவனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே
தில்லை ஆனந்த கூத்தனின் மகனே

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
வழியின்றி வேலனவன் திகைத்தான்
குறவள்ளியவள் கை பிடிக்க துடித்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறந்து விட்ட அண்ணனையே நினைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்
மறு கணத்தினிலே மகிழ்ச்சியிலே திளைத்தான்

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

கேட்டதெல்லாம் கொடுக்க வரும் பிள்ளை
அவன் கீர்த்தி சொல்ல வார்த்தைகளே இல்லை
ஆட்டமென்ன பாட்டுமென்ன அனைத்தும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
அவன் நாட்டமின்றி எவ்வாறு நடக்கும்
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு

தும்பிக்கை நம்பிக்கை கொடுக்கும்
வரும் துயர் யாவும் முன் நின்று தடுக்கும்
அஞ்சேலென்றொரு பாதம் எடுக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்
அவன் அசைந்து வர
அருள் மணிகள் ஒலிக்கும்

See Also  Ganeshashtakam 3 In English

பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
அதன் துணையாலே சுகம் கூடும் தொடர்ந்து
பிள்ளையார் சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு