Nayaganai Paada Naan Enna Thavam Seythein – நாயகனைப்பாட நான்

Ganesh Bhajans: Nayaganai Paada Naan Enna Thavam Seythein in Tamil:

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன் விநாயகனைப்:

நாயகனைப்பாட நான் என்ன தவம் செய்தேன்
விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன்
மூவுலகின் முதற்பொருளே முதல் பிள்ளை ஒளிவடிவே
முக்கண்ணன் அருட்பொருளே
முக்கனியின் வேதப் பொருளாய் அமர்ந்த (நாயகனைப்பாட )
அரசமரம் சுற்றிவந்து முரசம் பல கொட்டி நின்று (2)

பருப்போடு பாலும் பழரசம் அபிஷேகம் செய்து
அன்பர்க்கு அளித்திடவே
தேங்காய்ப்பூ இளநீரு தீர்த்தம் மணக்கும்
வெள்ளிரத ஊஞ்சல் ஆட
விரும்பமுடன் மனம் பாட வினைதீர்க்க அருள் கொடுக்க (2)

பொருள் குவிக்க மனம் இனிக்க
எருக்கம்பூ மாலையிலே இருக்கின்ற நாயகனே (2)
ஓதுகின்ற மனதினிலே
சிரிக்கின்ற சிரிப்பினிலே செல்வமெல்லாம் தருபவனே (2)

தேனமுதை தெளிப்பவனே சிவசக்தி விநாயகனே (2)
சித்தி விநாயகனைப் பாட நான் என்ன தவம் செய்தேன் (3)

See Also  109 Names Of Shree Siddhi Vinayaka – Ashtottara Shatanamavali In Gujarati