Asainthadum Mayil Ontru Kandal In Tamil

॥ Krishna Song: அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் Tamil Lyrics ॥

ராகம்: ஸிம்ஹேந்த்ரமத்யமம் தாளம்: ஆதி

பல்லவி
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் –
அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்! (அசைந்தாடும்)

அனுபல்லவி
இசையாரும் குழல் கொண்டு வந்தான் – இந்த –
ஏழேழ் பிறவிக்கும் இன்பநிலை தந்தான்
திசைதோறும் நிறைவாக என்றான் – என்றும் –
திகட்டாத வேணுகானம் ராதையிடம் ஈந்தான்

மத்யமகாலம்
எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –
– பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட
– மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பா…ட –
இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட –
(அசைந்தாடும் மயில்)

சரணம்

அசைபோடும் ஆவினங்கள் கண்டு – இந்த –
அதிசயத்தே சிலைபோலே நின்றதுவும் உண்டு
நிசமானசுகம் என்று ஒன்று – இருந்தால்
நீளுலகில் இதையன்றி – வேறெதுவும் அன்று!
இசையாரும் கோபாலன் இன்று – நின்று –
எழுந்தெழுந்து நடம்ஆட – எதிர்நின்று ராதைபாட -,

எங்………………………………….. கொண்டாட (அ)

See Also  108 Names Of Sri Adi Sankaracharya In Tamil