Jaya Jaya Ganapathy Om In Tamil – ஜெய ஜெய கணபதி

॥ Ganesh Bhajans: ஜெய ஜெய கணபதி ஓம் Tamil Lyrics ॥

பல்லவி 1

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஸ்ரீ
ஜெய ஜெய கணபதி ஓம்
ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே

சத்தியம் தர்மம் நாளும் துலங்க
கீர்த்தியெல்லாம் அடைய – அப்பப்பா
கீர்த்தியெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாவம் விலகிட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே

அப்பமும் அவல்பொரி வேண்டிக் கொடுக்க
ஏற்றிடவே வருக – அப்பப்பா
ஏற்றிடவே வருக
அன்பை வழங்கிட ஆசை அறுபட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே

செல்வமும் கல்வியூம் சேர்ந்து விளங்க
வீரம் எல்லாம் தருக – அப்பப்பா
வீரம் எல்லாம் தருக
நித்தம் மகிழ்திட நீதி நிலைத்திட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய கணபதி ஓம்

See Also  1000 Names Of Sri Gajanana Maharaja – Sahasranamavali Stotram In Kannada

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே

பந்தமும் பாசமும் சேரக்கிடைக்க
ஆசியெல்லாம் தருக – அப்பப்பா
ஆசியெல்லாம் தருக
மங்களம் வளங்கிட மாரி பொழிந்திட
அருள்வாய் கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்

ஜெய ஜெய கணபதி ஓம் – ஓம் ஓம்
ஜெய ஜெய கணபதி ஓம்
மதகரி மாமுக கணபதி ராஜா
சித்தி விநாயகனே – வினை
தீர்த்திடும் வேழவனே