Kandathundo Kannan Pol Puviyil Sahiye In Tamil

॥ Krishna Song: கண்டதுண்டோ கண்ணன் போல் Tamil Lyrics ॥

கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்
கண்டதுண்டோ கண்ணன் போல் புவியில்

கண்டதுண்டோ கண்ணன் போலே சகியே
* வானமுகில் போலும் மேனி வண்ணம் கொண்டான்
நானிலம் மயங்க கானம் பயில்வான்
ஆயர்பாடி தன்னில் ஆனிரைகள் மேய்ப்பான்
நேயமாக பேசி நெஞ்சம் புகுவான் (இரண்டு முறை)

* கண்மணி நீ என்பான் கைவிடேன் என்பான் (கண்டதுண்டோ)
கண்ணன் தான் கண்ணிமைத்தால் காணான்
கண்ணா கண்ணா கண்ணா
என்று நான் கதறிடும் போதனில் (இரண்டு முறை)
பண்ணிசைத்தே வருவான் சகியே (கண்டதுண்டோ)

See Also  1000 Names Of Sri Radhika – Sahasranamavali Stotram In Tamil