Kuzhandaiyaga Meendum Kannan In Tamil

 ॥ குழந்தையாக மீண்டும் கண்ணன் in Tamil ॥

குழந்தையாக மீண்டும் கண்ணன் பிறக்கமாட்டானா
புல்லாங்குழல் ஊதி என்னை மயக்க மாட்டானா

மாடு கன்று காட்டில் ஓட்டி மேய்க்க மாட்டானா
தினம் பாடி ஆடிஓடி என்னை சேர்க்க மாட்டானா (குழந்தை)

சின்னஞ்சிறு வாயை கொஞ்சம் திறக்க மாட்டானா
கண்ணில் இந்த உலகத்தையே காட்ட மாட்டானா
என்னை அவன் தோழனாக ஏற்க மாட்டானா
வெண்ணெயிலே பங்கு போட்டு நீட்டமாட்டானா (குழந்தை)

மலையை எடுத்து குடையை போல பிடிக்க மாட்டானா
என் தலையில் மழை விழுவதையே தடுக்க மாட்டானா
கீதை தன்னை திரும்பவுமே கூற மாட்டானா
அதை கேட்டு நாமும் சிறந்தவராய் மாற மாட்டோ

– Chant Stotra in Other Languages –

Sri Krishna Song – Kuzhandaiyaga Meendum Kannan Lyrics » English

See Also  Ganesha Ashtottara Sata Nama Stotram In Tamil And English