Pollatha Vishamakara Kannan In Tamil

॥ Krishna Song: பொல்லாத விஷமக்காரக் கண்ணன் Tamil Lyrics ॥

ராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஏகம்
பாடல்:: ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்

பல்லவி

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
வேடிக்கையாய் பாட்டுப் பாடி
வித விதமாய் ஆட்டம் ஆடி
நாழிக் கொரு லீலை செய்யும்
நந்த கோபால கிருஷ்னன்.
(விஷமக்காரக் கண்ணன்)

அனுபல்லவி

வெண்ணை பானை மூடக் கூடாது – இவன் வந்து
விழுங்கினாலும் கேட்கக் கூடாது
இவன் அம்மா கிட்டே சொல்லக் கூடாது -சொல்லிவிட்டால்
அட்டகாசம் தாங்க ஒண்ணாது

இவனை சும்மாவது பேச்சுக்காக திருடன் என்று சொல்லிவிட்டால்
அம்மா, பாட்டி,அத்தை,தாத்தா அத்தனை பேரும் திருடன் என்பான்
(விஷமக்காரக் கண்ணன் )

பக்கத்து வீட்டுப் பெண்ணை அழைப்பான்
முகாரி ராகம் பாடச்சொல்லி வம்புக் கிழுப்பான்
எனக்கு அது தெரியாது என்றால் நெக்குருகக் கிள்ளி விட்டு
விக்கி விக்கி அழும்போது இதுதான்டி முகாரி ராகம் என்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

வெண்ணை பானை மூடக்கூடாது
இவன் வந்து விழுங்கினாலும் கேட்கக்கூடாது
இவன் அம்மாக்கிட்டே சொல்லக்கூடாது
சொல்லிவிட்டால் அட்டகாசம் தாங்க‌ ஒண்ணாது
சும்மா ஒரு பேச்சுக்கானும் திருடன்னு சொல்லி விட்டால்
ஐயா அம்மா பாட்டி அத்தை தாத்தா அத்தனையும் திருடனென்பான்
(விஷமக்காரக் கண்ணன்)

நீலமேகம் போலே இருப்பான் கண்ணன்
பாடினாலும் நெஞ்சில் வந்து குடியிருப்பான்
கோலப் புல்லாங் குழலூதி கோபிகைகளை கள்ளமாடி
கொஞ்சம் போல வெண்ணை தாடி
என்று கேட்டு ஆட்டமாடி
(விஷமக்காரக் கண்ணன்)

பொல்லாத விஷமக்காரக் கண்ணன்
விதவிதமாய்ப் பாட்டுப்பாடி
விதவிதமாய் ஆட்டமாடி
நாழிக்கொரு லீலை செய்யும்
நந்தகோபால கிருஷ்ணன்………. ………………
(விஷமக்காரக் கண்ணன்)

See Also  1000 Names Of Sri Shiva From Vayupurana Adhyaya 30 In Tamil