॥ சிவார்ச்சனா சந்திரிகை – வைகறைத் தியானம் ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய:
(தமிழ் மொழி பெயர்ப்பு)
வைகறைத் தியானம்
சூரியோதயத்திற்கு முன் இரண்டு முகூர்த்தம் அஃதாவது, ஐந்து நாழிகையிருக்கும்பொழுதே எழுந்து கைகால்களைக் கழுவிக்கொண்டு விபூதி தரித்து சமயதீக்ஷையுடையவர்கள் இருதயத்திலும், விசேட தீக்ஷையுடையவன் விந்துத்தானமான லலாடத்திலும், நிருவாணதீக்ஷையுடையவன் சிரசிலும், போதகாசிரியரும் ஆசாரியாபிஷேகம் பெற்றுக்கொண்டவரும் துவாதசாந்தத்திலும் பரமேசுவரனைத் தியானிக்க வேண்டும். பின்னர் மனத்திற்கு இனிமையைத் தரும் சிவபிரானுடைய நாமங்களையும் சரித்திரங்களையும் சங்கீர்த்தனஞ்* செய்க. ( *சங்கீர்த்தனம் – நன்றாய்ச் சொல்லுதல். )