Shiva Archana Chandrikai – சிவார்ச்சனா சந்திரிகை

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய ॥ சிவார்ச்சனா சந்திரிகை ॥ (தமிழ் மொழி பெயர்ப்பு) ॥ மங்கள வாழ்த்து ॥ பரிபூரணமான சத்தியையுடைய எந்தப் பரம்பொருளினது ஒரு சிறு கூற்றிலே இந்த எல்லாப் பிரபஞ்சங்களும் அடங்கினவெனச் சிவாகமங்களை அறிந்தவர் கூறுகின்றனரோ, அத்தகைய, பச்சினை (தமால விருக்ஷம்) மரத்தின் காந்திபோல் விளங்கும் கழுத்தையுடையவராயும், நாராயணியென்னும் சத்திக்கு நாயகராயுமிருக்கும் சிவபெருமானுக்கு வணக்கம் செய்கிறேன். நூல் சைவர்கள் அனுட்டிக்கவேண்டிய கடமைகளுள் ஆன்மார்த்த சிவபூஜையானது இன்றியமையாது செய்யத்தக்கதாகும். அது, வைதிக முறையாயும், வைதிகத்தோடு … Read more

Sivarchana Chandrika – Paathiyam Muthaliyavatyrin Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பாத்தியம் முதலியவற்றின் பூஜை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபாத்தியம் முதலியவற்றின் பூஜை பின்னர் பாத்தியம், ஆசமனீயம் சாமான்னியார்க்கியம், விசேஷார்க்கியம், நிரோதார்க்கியம், பராங்முகார்க்கியம் என்னும் இவற்றின் பாத்திரங்களின், முக்காலிகளையும், ஈசுவரனுடைய சன்னிதியில் இடது பக்கம் முதல் முறையாக வைத்துக் கொண்டு முக்காலிகளின் பாதங்களில் பிரம, விட்டுணு, உருத்திரர்களையும், அதன் வளையங்களில் இடை என்னும் பெயருடைய ஆதாரசக்தியையும் அருச்சித்து பாத்திய முதலிய பாத்திரங்களை அஸ்திரமந்திரத்தால் சுத்தி செய்து முக்காலிகளில் வைத்துக்கொண்டு … Read more

Sivarchana Chandrika – Thiraviyam Seegarikkum Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – திரவியம் சேகரிக்கும் முறை ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதிரவியம் சேகரிக்கும் முறை அஃதாவது பின்னர்க் கூறப்படும் யாகத்திற்கு உபகரணங்களான எல்லாத் திரவியங்களையும் சிவனுடைய இடது பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆடையினால் பரிசுத்தமான சுத்தஜலத்தால் நிரம்பப் பெற்ற ஜலபாத்திரத்தை வலதுபக்கத்தில் வைத்துக்கொண்டு ஆத்மபூஜை ஆவரணபூஜைகள் செய்வதின் பொருட்டுச் சேகரித்துள்ள கந்தம், புஷ்பம் என்னுமிவைகளைச் சிவபிரானுக்காகச் சம்பாதிக்கப்பட்ட திரவியங்களுக்கு வேறாகவைத்துக் கொண்டு, அருக்கியபாத்திரம், பாத்தியபாத்திரம், ஆசமனீயபாத்திரங்களில் ஜலங்களைப் பூர்த்தி செய்தல் வேண்டும். … Read more

Sivarchana Chandrika – Thaana Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தானசுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதானசுத்தி அஃதாவது இருதயத்தில் கைகளை உயரே மேல்நோக்கியவையாகச் செய்து, ஹ: அஸ்திராய ஹும்பட்என்னும் மந்திரத்தால் மூன்று தாளஞ்செய்து, நொடியில் பத்துத் திக்குக்களிலுமுள்ள விக்கினங்களை போக்கி, அஸ்திரமந்திரத்தால் சொலிக்கக்கூடிய அக்கினி வருணமான கோட்டையைச் செய்து, பின்னர் வெளியில் ஹைம் கவசாய நம: என்னும் மந்திரத்தால் வலதகை சுட்டுவிரலைச் சுற்றிக்கொண்டு மூன்று அகழிகளைச் செய்து, ஹாம் சக்தயே வெளஷட் என்னும் மந்திரத்தால் சத்திசம்பந்தமான தேஜசை … Read more

Sivarchana Chandrika Antharyagam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அந்தரியாகம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஅந்தரியாகம் அஃதாவது இருதயத்துள் சிவனையருச்சிக்கத்தக்க திவ்ய இரத்தினமயமான மண்டபத்தை மனத்தால் கற்பித்து அம்மண்டபத்தில் சிவனையருச்சிப்பதற்கு உபயோகமான சகல திரவியங்களையும் மனத்தால் கொண்டுவைத்து அந்தத்திரவியங்களைச் சுத்திசெய்து துவாதசாந்தத்திலிருக்கும் சந்திரமண்டலத்திலிருந்து ஒழுகுகின்ற அமிருததாரையினால் அருக்கிய பாத்தித்தை நிரப்பி அதன் சுத்தியையுஞ் செய்து துவாரபால பூஜை செய்து பின்னர்க் கூறப்படுமுறையில் விநாயகர் குரு என்னுமிவர்களை நமஸ்கரித்தல் அனுக்ஞை பிரார்த்தனை என்னுமிவைகளை முன்னிட்டு நாபியிலிருக்கும் சொர்ணமயமான வருணத்தையுடைய … Read more

Sivarchana Chandrika – Agathu Agnikariyam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அகத்து அக்கினி காரியம் ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஅகத்து அக்கினி காரியம் அஃதாவது நாபியில் மூன்று மேகலையையுடைய குண்டமும் அதில் இயல்பாகவே அக்கினி இருப்பதாகவும் பாவித்து அந்த அக்கினியை அஸ்திரமந்திரத்தால் சுவாலிக்கும்படி செய்து அந்த அக்கினியில் சிறிது தணலை இராக்ஷச அம்சமாகப் பாவித்து அதை நிருதி கோணத்தில் போட்டுவிட்டு, குண்டத்திலிருக்கும் அக்கினியை நிரீக்ஷணம் முதலிய நான்கு சுத்திகள் செய்து, அந்த அக்கினியை சிவாக்கினையாகப் பாவிப்பதற்கு ரேசகவாயுவால் அந்த … Read more

Sivarchana Chandrika – Thathuva Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தத்துவ சுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதத்துவ சுத்தி பின்னர் தத்துசுத்தி ரூபமான தேகசுத்தியை செய்ய வேண்டும். அது வருமாறு:- பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், சுரோத்திரம், துவக்கு, கண், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், பாயு, உபத்தம், சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம், ஆகாயம், வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்தத் தத்துவங்களின் ரூபமாயும், அருவமாயும், அசுத்தமாயுமிருக்கும் ஆன்ம தத்துவ ரூபமாகத் … Read more

Sivarchana Chandrika – Boothasuththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பூதசுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைபூதசுத்தி பிருதிவி முதலிய மண்டலங்களை நிவிருத்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, சாந்திய தீதை என்னும் ஐந்து கலாமயமாயும், சரீரத்தில் பாதமுதற்கொண்டும், முழங்கால் முதற் கொண்டும், நாபி முதற்கொண்டும், கண்டம் முதற்கொண்டும், புருவநாடு முதற்கொண்டும் இருப்பனவாயும், இருதயம், கண்டம், அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும்இவற்றைச் சார்ந்திருப்பனவாயும், நூறுகோடி யோஜனை அளவு முதல் மேலும் மேலும் பதின்படங்கு அளவுள்ளனவாயும், நான்கு சதும், பாதிச்சந்திரன், மூன்று கோணம், … Read more

Sivarchana Chandrika – Thegasuththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தேகசுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைதேகசுத்தி தேக சுத்தியானது சூக்கும தேகசுத்தி தூலதேகசுத்தியென இருவகைப்படும். சூக்குமதேகசுத்தியாவது:- சப்தம், பரிசம், ரூபம், இரதம், கந்தம், புத்தி, அகங்காரம், மனம் என்னுமிவ்வெட்டின் ரூபமான சூக்கும சரீரசுத்தியின்பொருட்டு, இருதயம், கண்டம், அண்ணம், புருவநாடு, பிரமரந்திரமென்னும் இவற்றிலிருக்கும் பிரமன் முதலிய காரணபுருடர்களுள் பிரம்மணிசப்தஸ்பரிசௌ பிரவிலாபபயமி (பிரமாவினிடத்தில் சப்த பரிசம் என்னுமிவற்றை ஒடுங்கும்படி செய்கிறேன்.) ரசம் விஷ்ணௌ பிரவிலாபயாமி (இரதத்தை விஷ்ணுவினிடத்தில் ஒடுங்கும்படி செய்கின்றேன். … Read more

Sivarchana Chandrika – Aanma Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆன்ம சுத்தி ॥ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகைஆன்ம சுத்தி ஆன்மசுத்தியானது பூசிப்பவனான சீவனைச் சிவமாகப் பாவனைசெய்யும் சீவசுத்தி ரூபமாயும் பூசிப்பவனுடைய தேகத்தைச் சிவதேகமாகப் பாவிக்கும் தேகசுத்தி ரூபமாயும், இருவகைப்படும். அவற்றுள், சீவசுத்தி முறை வருமாறு:- மூன்று முறை பிராணாயாமஞ்செய்து தேகத்தினுள்ளிருக்கும் அசுத்தவாயுவை ரேசகரூபமான மூன்று பிராணாயாமத்தால் அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வெளியில் விட்டு, வெளியிலிருக்கும் வாயுவால் வயிற்றை நிரப்பி இருகால் கட்டைவிரல் முதற்கொண்டு மூலாதாரம் வரையிரண்டாகவும், மூலாதாரத்திற்மேல் பிரமரந்திரம் … Read more