Muruganai Ninai Maname In Tamil

॥ Muruganai Ninai Maname Tamil Lyrics ॥

॥ முருகனை நினை மனமே ॥
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே
உருகிடும் மறுகணமே…..
உருகிடும் மறுகணமே
நெருங்கி வருவது அவன் குணமே….
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே

ஒவ்வொரு நொடியிலும்
அருகினில் இருப்பவன்…
ஆ…. ஆ…. ஆ.. ஆ….
ஒவ்வொரு நொடியிலும்
அருகினில் இருப்பவன்
ஒவ்வொரு செயலிலும்
பெருமையை கொடுப்பவன்
உடலுக்கு உயிர் எனில்
உயிருக்கு ஒளியவன்
உடலுக்கு உயிர் எனில்
உயிருக்கு ஒளியவன்
உணர்ந்தவர் தொழுதிடும்
உயர்ந்தவர் பரவிடும்
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே

அழகனின் அழகினில்
இருவிழி குளிர்ந்திடும்
ஆ…. ஆ….. ஆ….. ஆ…….
அழகனின் அழகினில்
இருவிழி குளிர்ந்திடும்
அவன் விழி அசைவினில்
கலைகளும் மலர்ந்திடும்
அவன் அருள் மழையினில்
உணர்வுகள் சிலிர்த்திடும்
அவன் அருள் மழையினில்
உணர்வுகள் சிலிர்த்திடும்
அறிவுடன் பொருள் புகழ்
அனைத்திலும் சிறந்திட

முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே
உருகிடும் மறுகணமே…..
நெருங்கி வருவது அவன் குணமே….
முருகனை நினை மனமே
நலங்கள் பெருகிடும் தினம் தினமே

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Muruganai Ninai Maname in English

See Also  Gayatri Ramayana In Tamil