॥ Kandhan Kaladiyai Vananginal Tamil Lyrics ॥
॥ கந்தன் காலடியை வணங்கினால் ॥
பாடகர்: டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர்: குன்னக்குடி வைத்யநாதன்
ஆண்: கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
ஆண்: கந்தன் காலடியை வணங்கினால்
ஆண்: தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்
சிவ சக்திதானே வேலன்
தந்தை பரமனுக்குச் சிவகுரு நாதன்
தாயார் பார்வதியின் சக்திதானே வேலன்
சிவ சக்திதானே வேலன்
ஆண்: அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய்மாமன்
ஆண்: அண்ணன் அவன் கணேசன்
கண்ணன் அவன் தாய்மாமன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன் தான் திருமகன்
மாமனுக்குப் பிள்ளையில்லை
மருமகன்தான் திருமகன்
கந்தன் காலடியை வணங்கினால்
ஆண்: உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
உமையவள் தன் வடிவம் மதுரையில் மீனாட்சி
உருவத்தில் மாறுபட்டாள் காஞ்சியில் காமாட்சி
ஆண்: கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாட்சி
ஆண்: கங்கையிலே குளிக்கின்றாள் காசி விசாலாட்சி
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கு இணை எவனுண்டு
அன்னையர்கள் பலருண்டு அவனுக்கு இணை எவனுண்டு
கந்தன் காலடியை வணங்கினால்
ஆண்: பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
பிரணவ மந்திரத்தை மறந்தான் பிரம்மனே
அவனைச் சிறையினிலே அடைத்தான் முருகனே
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
அதனால் கந்தனிடம் பிரம்மனும் மிரளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
கந்தன் அடியவருக்கு அவனும் அருளுவான்
ஆண்: கந்தனிடம் செல்லுங்கள்
ஆண்: என்ன வேண்டும் சொல்லுங்கள்
கந்தனிடம் செல்லுங்கள்
என்ன வேண்டும் சொல்லுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்
வந்த வினை தீர்ந்து விடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்
ஆண்: கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
கந்தன்…..கந்தன்…..கந்தன்….. காலடியை வணங்கினால்
– Chant Stotra in Other Languages –
Murugan Song » Kandhan Kaladiyai Vananginal in English