Kaattula Samikku Veedu Ayyappa Songs In Tamil

॥ Kaattula Samikku Veedu Ayyappa Tamil Lyrics ॥

॥ காட்டுல சாமிக்கு வீடு ॥
ஓஓ..ஹரிஓம் ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே
சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
காட்டுல சாமிக்கு வீடு யானையும் புலிகளும் இருக்குது பாரு
காட்டுல சாமியை பாடு யானையும் புலிகளும் வழிவிடும் பாரு
நாளும் விரதம் நீயுமிருந்து பாரு போய்ப்பாரு
பசியிலகேட்டது எல்லாம் தருவாரு இப்படிச் செய்வாரு
மனசுல எண்ணின மாதிரி வருவாரு (காட்டுல)

சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
ஹரிகரசுதனே சரணம் பொன்னய்யப்பா ஹரிகரசுதனே
ஹரிஓம் ஹரிகரசுதனே
பம்பையில் நிராடு பக்தியில் ஐயப்பன் பேரையும் பாடு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
ஐயப்பா சாமியே சாமியே ஐயப்பா
கரிமலை ஏற்றம் கடினம் பாரு
காலுவலிச்சா சத்தம் போட்டு சாமியை நீபாடு – சாமியே (காட்டு)

சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
ஹரிகரசுதன சரணம் பொன்னய்யப்பா ஹரிகரசுதனே
ஹரிஓம் ஹரிகரசுதனே
சபரிபீடம் அதைப்பாரு தெரியும் பாரு சரங்குத்திஆலு
போடு வேட்டுவழிபாடு போட்டசாமி வரம் தருவாரு
படிபதினெட்டும் ஏறியும் பாரு
தெரியும் அங்கு சன்னதி பாரு சாமியை நீ பாரு – சாமியே (காட்டுல)

ஹரிஓம் ஹரிகரசுதனே ஹரிஓம் ஹரிகரசுதனே
சரணம் சரணம் சரணம்
தேவலோகம் அதைப்போல சாமியின் வீடுஜொலிக்குதுபாரு
தேவை என்ன கேட்டிட வேணும்
லாபம் வேண்டி கேட்டிட வேணாம் – நியாயம்தருவாரு (காட்டுல)

சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே
சாமியே ஐயப்பா ஐயப்பா சாமியே

See Also  Sri Krishna Stotram (Narada Rachitam) In Tamil

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Kaattula Samikku Veedu Ayyappa in English