॥ சிவார்ச்சனா சந்திரிகை – பூசையைப் பூர்த்திசெய்யும் முறை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பூசையைப் பூர்த்திசெய்யும் முறை
பின்னா¢, சத்தியோஜாதம் முதலாக முறையே ஐந்து சிரசுகளிலும் சிவனையருச்சித்து, அஸ்திரம் முதல் இருதயம் ஈறாகவுள்ள அங்கங்களையும் எதிர் முறையாகப் பூசித்து, விருப்பப்படி முன்போல் ஊர்த்துவமுகமாக இருப்பீராகவென்று பிரார்த்தித்து ஹாம், ஹெளம், சிவாய ஸாங்காய பராங் முகார்க்கியம் ஸ்வாஹா என்று பராங்முகார்க்கியங் கொடுத்து, கொ¢ப்பக்கிருகத்திலிருக்கும் ஆவரணரூபமான சத்தியோஜாதம் முதலிய பஞ்சப்பிரம மந்திரங்களையும், அஸ்திரம் முதலிய அங்கமந்திரங்களையும், ஈசுவரனுடைய அங்கங்களில் சேர்க்க வேண்டும். ஏனைய ஆவரணதேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுக்க வேண்டும்.
பின்னர், ஹும்பட்என்னும் பதத்தையிறுதியிலுடைய அஸ்திரமந்திரத்தால் இருகைகளிலுள்ள கட்டைவிரல் சுட்டுவிரல்களின் நுனிகளால் புஷ்பத்தை உயரே எறிந்துகொண்டு நாராசமுத்திரையால் வித்தியேசுவரர் முதலியோரை யெழுந்தருளச் செய்து, ஹாம், ஹம், ஹாம், சிவமூர்த்தயே நம: என்று சொல்லிக் கொண்டு, திவ்யமுத்திரையினால் சிவனுடைய இருதயத்தானத்தில் சேர்த்து, அவர்களைச் சிவனிடத்தில லயமடைந்தவர்களாகப் பாவிக்க வேண்டும்.
பின்னர், குருகிரகம், வித்தியாபீடம், சப்தகுருக்கள், மகாலக்குமி, கணபதி, துவாரபாலர் ஆகிய இவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங்கொடுத்து அவரவர் மந்திரத்தால் அவர்களை அனுப்புதல் வேண்டும்.
பின்னர், பரிவார தேவர்களின் பொருட்டும் பராங்முகார்க்கியங் கொடுத்துத் தனித்தனி புஷ்பத்துடன் கூடிய ஆடைகளால் அவர்களைமூடி அஸ்திரமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு பெட்டியின் பக்கங்களில் வைக்க வேண்டும்.
பின்னர், சிவமந்திரத்தை யுச்சரித்து, பத்மபீடத்தினின்றும் லிங்கத்தையெடுத்து, வெண்பட்டு முதலியவற்றால் மூடி, பெட்டியின் நடுவில் வைத்து, பீமருத்திரத்தைத் தியானித்து, காக்க வென்ற சிவாஞ்ஞையைத் தெரிவித்து பெட்டியை மூட வேண்டும்.
பின்னர் மிச்ரபூசை செய்ய வேண்டும். அதாவது, முதலாவது சண்டேசுவரபூசை செய்யாமல், சிவனைப் பெட்டியிலெழுந்தருளச் செய்த பின்னர், ஆவாகனம் முதலிய எல்லாவுபசாரங்களுடன் சண்டேசுவர பூசையைச் செய்ய வேண்டும்.