Sivarchana Chandrika – Karaniyasam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – கரநியாசம் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
கரநியாசம்

இடதுகையையும் இடதுகையின் பின்பக்கத்தையும் மணிக்கட்டு முதற்கொண்டு வலதுகையினால் ஹ: அஸ்திராயபட் என்ற மந்திரத்தை உச்சரித்துத் துடைத்து, இருகைகளிலும் சந்தனமிட்டு அஸ்திர மந்திரத்தால் இருமுறை துடைத்து அதே மந்திரத்தால் வலதுகையையும் அதன் பின் பக்கத்தையும் இடதுகையால் ஒருமுறை துடைத்து இருகைகளையும் மணிக்கட்டுவரை அஸ்திர மந்திரத்தின் தேஜஸால் வியாபிக்கப்பட்டனவாகப் பாவித்து இருகைகளையும் சம்புடம்போல் மூடி, இரண்ட கட்டைவிரல்களில் மத்தியில் அமிர்தமயமான சத்திமண்டலத்தைத் தியானித்து ஹாம் சக்தயேவெளஷட் என்னும் மந்திரத்தை உச்சரித்து அந்த அமிர்தத்தால் இருகைகளையும் நனைத்து, சேர்க்கப்பட்ட இரு கட்டைவிரல்களின் அடிகளையுடையசம்புடம் போன்ற இருகைகளிலும் ஓம்ஹாம் சிவாசனாய நம: என்று நியாசஞ் செய்து, கையின் மத்தியில் ஓம்ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து, பிரகாசரூபமாயும், அலையாத மின்னலுக்குச் சமானமாயும், வெண்மை நிறமுடையதாயுமிருக்கும் பரமசிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து ஹோம் ஈசானமூர்த்தாய நம: எனற மந்திரத்தால் இரண்டு கட்டைவிரல்களிலும் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, சுட்டுவிரல் முதல் சுண்டுவிரல் வரையுள்ள விரல்களில் கட்டை விரல்களால் ஹேம் தத்புருஷவக் திராய நம: என்பது முதலிய நான்கு மந்திரங்களால் நியாசஞ் செய்து, ஹாம்ஹெளம் வித்தியாதேஹாய நம: என்ற மந்திரத்தை உச்சரித்துக் கட்டைவிரைல் அணிவிரல்களால் இரண்டு கைகளிலும் முப்பத்தெட்டுக கலைகளின் சொரூபமாயும் சதாசிவ சொரூபமாயுமிருக்கும் தூலமான வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திரேபியோ நம: என்னும் மந்திரத்தால் கைகளில் நேத்திரத்தை நியாசஞ்செய்து ஹாம்ஹெளம் சிவாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து, கட்டைவிரல் அணிவிரல்களால் சதாசிவ தேகத்திற்கு வியாபகமான சிவனை ஆவாகனஞ் செய்யவேண்டும். பின்னர் சுண்டுவிரல் முதலிய விரல்களில் ஹாம்ஹிருதயாய நம: என்பது முதலிய ஐந்து மந்திரங்களை நேத்திர மந்திரத்தை நீக்கி முறையே நியாசஞ்செய்து, இடது வலது கைகளை ஒன்றை ஒன்றினால் கவசாய நம: என்று மூடி இரண்டு கைகளையுஞ் சேர்த்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்யவேண்டும்.

See Also  Muddugaare Yasoda In Tamil

பரமீகரணமாவது நியாசஞ் செய்யப்பட்ட இருதயம், சிரசு, சிகை முதலியவைகளும், வேறு வேறு வர்ணமான கலைகளும், ஆவாகனஞ் செய்யப்பட்ட பரமசிவனுடைய மிகவெண்மையான தேஜசுடன் அந்தந்த வர்ணங்களோடு கலப்பதாகப் பாவித்தல்.