Andathin Thalaivane Arputham Puriva In Tamil

॥ Andathin Thalaivane Arputham Puriva Tamil Lyrics ॥

॥ அண்டத்தின் தலைவனே அற்புதம் ॥
அண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் சரணம் ஐயப்பா!
அகந்தை அழிப்பவனே அச்சுதன் மகனே சரணம் ஐயப்பா!
ஆதியே ஜோதியே ஆதி பராபரமே
சரணம் ஐயப்பா!

ஆசியருள வேண்டும் ஆசான் எமக்கு நீயே சரணம் ஐயப்பா!
தத்துவப் பொருளே வித்தகச் செல்வா
சரணம் ஐயப்பா!
தர்மத்தின் உருவே தனிப்பெரும் சுடரே
சரணம் ஐயப்பா!

பதினெட்டாம் படியோனே பார்புகழ் தலைவா சரணம் ஐயப்பா!
பரம பவித்ரனே பராசக்தி மகனே
சரணம் ஐயப்பா!
சத்திய உருவே சமத்துவத் தலைவா
சரணம் ஐயப்பா!

சபரியின் சுதனே சமதர்மத் திருவே
சரணம் ஐயப்பா!
சுந்தர முகத்தோனே சுகமெல்லாம் அருள்வாய் சரணம் ஐயப்பா!
சுவர்க்கத்தார் துதிக்கும் சுத்த சக்தியே
சரணம் ஐயப்பா!

நினைத்ததும் வருவாய் நினைத்தன தருவாய் சரணம் ஐயப்பா!
நிலத்தின் வளமே நிர்மல மூர்த்தியே
சரணம் ஐயப்பா!
தீயன அழிப்பாய் நல்லன அருள்வாய்
சரணம் ஐயப்பா!

தீனதயாபரனே தீரா வினை தீர்ப்பாய்
சரணம் ஐயப்பா!
அனைத்தும் நீயே ஆதார நாயகா
சரணம் ஐயப்பா!
அடியார் துயர் அகற்றும் அதிசயப் பிறவியே சரணம் ஐயப்பா!

See Also  1000 Names Of Sri Dattatreya – Sahasranama Stotram 2 In Tamil