Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Ayyappan In Tamil

॥ Arulum Porulum Aalum Thiranum Alli Tharuvaan Tamil Lyrics ॥

அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்.. ஆ…..

ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன்

வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே
வெள்ளை மனக் கோவிலிலே விரதமணி தீபத்திலே
வீரமணிகண்டனையே வேளை எல்லாம் தொழுதவர்க்கு

அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்

அகமும் புறமும் புனிதம் கொண்டால் அருகில் வருவான் ஐயப்பன்

யுகங்கள் தோறும் யோகம் செய்வான் கலியுக வரதன் ஐயப்பன்

இருமுடி தாங்கி வந்து ஒருநிலை நின்றவர்க்கு

சரங்குத்தி சாஸ்தாவின் அருள்ஜோதி கண்டவர்க்கு
அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்

பாலில் நெய்போல் நீரில் குளிர்போல் பதமாய் இருப்பான் ஐயப்பன்

நாலும் கடந்து ஞானம் வந்தால் நற்தனம் புரிவான் ஐயப்பன்

பம்பை நதி தீரத்திலே பாவம் விட்டு வந்தவர்க்கு
பதினெட்டாம் படிதொட்டு பாலன் முகம் பார்த்தவர்க்கு
அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்
ஆடிப்பாடி போற்றும் நெஞ்சில் ஆட்சி செய்வான் ஐயப்பன்
அருளும் பொருளும் ஆளும் திறனும் அள்ளித் தருவான் ஐயப்பன்
அள்ளித் தருவான் ஐயப்பன்… அள்ளித் தருவான் ஐயப்பன்…… அள்ளித் தருவான் …… ஐயப்பன்……

See Also  108 Names Of Mata Amritanandamayi – Ashtottara Shatanamavali In Tamil