Arupadai Veedu Konda Thirumuruga In Tamil

॥ Arupadai Veedu Konda Tamil Lyrics ॥

॥ அறுபடை வீடு கொண்ட திருமுருகா ॥
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
பாட்டுடைத் தலைவன் என்று
உன்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன்
உன்னைப் பாடித் தொழுவதற்கே
என்னை வைத்தேன் முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு….
அந்த வெள்ளிப் பனித் தலையர் கொடுத்ததற்கு….
ஊஉ….ஊ…..ஊ…..ஊ…..ஆ…..ஆஅ…..ஆஅ…..

வேண்டிய மாம்பழத்தை கணபதிக்கு
அந்த வெள்ளிப் பனித் தலையர்
கொடுத்ததற்கு
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
ஆண்டியின் கோலமுற்று மலை மீது
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு
நீ அமர்ந்த பழநி ஒரு படை வீடு

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
ஒரு பெரும் தத்துவத்தின் சாறெடுத்து
நல்ல ஓம் எனும் மந்திரத்தின்
பொருள் உரைத்து
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
தந்தைக்கு உபதேசம் செய்த மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை
எங்கள் தமிழ்த் திரு நாடு கண்ட
சுவாமி மலை

See Also  Vasavi Kanyaka Parameshwari Ashtottara Shata Namavali In Tamil

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
தேவர் படைத் தலைமை பொறுப்பெடுத்து
தோள்கள் தினவெடுத்து சூரன் உடல் கிழித்து
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கோவில் கொண்டே அமர்ந்த ஒரு வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு
கடல் கொஞ்சும் செந்தூரில் உள்ள படை வீடு

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
குறு நகை தெய்வானை மலரோடு
உந்தன் குல மகளாக வரும் நினைவோடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
திருமணக் கோலம் கொண்ட ஒரு வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு
வண்ணத் திருப்பரங்குன்றம் என்னும் படை வீடு

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
தேவர் குறை தவிர்த்து சினம் தணிந்து
வள்ளி தெள்ளுத் தமிழ்க் குறத்தி தன்னை மணந்து
காவல் புரியவென்று அமர்ந்த மலை
காவல் புரியவென்று அமர்ந்த மலை
எங்கள் கன்னித் தமிழர் திருத் தணிகை மலை
தணிகை மலை திருத் தணிகை மலை

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு….
அடியவர்க்கு….
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
கள்ளமில்லாமல் வரும் அடியவர்க்கு
நல்ல காட்சி தந்து கந்தன் கருணை தந்து
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
வள்ளி தெய்வானையுடன் அமர் சோலை
தங்க மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை
மயில் விளையாடும் பழமுதிர்ச் சோலை…ஈ…..ஈ….ஈ….
முருகா….

See Also  Narayana Sukta Stotram In Tamil And English

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
திரு முருகாற்றுப் படை தனிலே
வரும் முருகா முருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா
முருகா…. முருகா….

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Arupadai Veedu Konda Thirumuruga in Tamil