Ayyappa Gayatri / Sastha Gayatri Mantra In Tamil

சபரி மலையில் சாஸ்தாவாக வீற்றிருக்கிறார் ஐயப்பன். அவரை காண பலகோடி பேர் நினைத்தாலும் எல்லோராலும் அவரை தரிசிக்கமுடிவதில்லை. காரணம் என்னவென்றால் ஐயப்பன் நம்முடைய பெயரை உச்சரித்து அழைத்தாள் மட்டுமே நம்மால் மலைக்கு செல்லமுடியும் என்று கூறப்படுகிறது. இப்படி பல சிறப்புக்கள் பெற்ற ஐயப்பனின் அருளை பெற ஐயப்ப மாலை அணிந்தோர் விரதம் இருக்கும் 48 நாளும் தினம் தினம் ஜபிக்க வேண்டிய ஐயப்பன் காயத்ரி மந்திரம் இதோ.

Ayyappa Gayatri Mantra:

॥ ஐயப்பன் காயத்ரி மந்திரம் ॥
ஓம் பூதநாதய வித்மஹே
பவ நந்தநாய தீமஹி
தன்னோ சாஸ்தா ப்ரசோதயாத்

பொது பொருள்:

சிவனின் மகனான ஐயப்ப சுவாமியே, என் மனதில் தெளிவை ஏற்படுத்தி எனக்கு நல்லாசி புரிய உங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன். இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் பயனாக நம் மனதில் ஒரு தெளிவு பிறக்கும். நம்மை ஆன்மிக நெறிப்படி இந்த மந்திரம் வழிநடத்தும். பாவங்கள் நம்மை விட்டு நீங்கும், துன்பங்கள் பறந்தோடும்.
மாலை அணியாத சமயத்திலும் இந்த மந்திரத்தை ஜபிப்பதால் தவறில்லை. ஆனால் மாலை அணியும் சமயத்தில் எவ்வளவு பக்தியும் சுத்தமும் நம்மிடம் இருக்கிறதோ அதே அளவு பக்தியும் சுத்தமும் இருந்தால் மட்டுமே மந்திரத்தை தினமும் ஜெபிக்கவேண்டும்.

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Ayyappa Gayatri / Sastha Gayatri Mantra in English

See Also  Sri Anjaneya Dandakam In Tamil – Hanuman Stotram