Ayyappa Swamiye Arul Seiyappa Swamiye In Tamil

॥ Ayyappa Swamiye Arul Seiyappa Swamiye Tamil Lyrics ॥

ஐயப்ப சாமியே.. அருள் செய்யப்பா சாமியே
வெற்றிக் கருளும் சபரிமலைக்கு

விரதம் இருந்தால் வெற்றி கிடைக்கும்
சற்று மறந்து தன்னை உணர்ந்தால்
சத்திய‌ முரசம் சுற்றி முழக்கும் (ஐயப்ப)

மாலையணிந்து ஆலயம் வந்தால்
பால்முகம்போல் வாழ்வும் மணக்கும்
குத்தும் கல்லும் கூரிய‌ முள்ளும்
மெத்தையாக்கும் மெய்யருள் சேர்க்கும் (ஐயப்ப)

பம்பையாற்றில் ஆடிப் பணிந்தால்
பாற்கடல் வாசன் ஆற்றல் பிறக்கும் (ஐயப்ப)

உள்ள‌ விளக்கம் உணமை விளக்கம்
ஒளியின் விளக்கம் மகர‌ விளக்கே (ஐயப்ப)

மண்டல‌ விரதம் மணிகண்டன் விரதம்
தொண்டர்கள் விரதம் திருவடிச் சரணம்

சித்தம் விளைந்தால் சித்தி கிடைக்கும்
பக்தி விளைந்தால் முக்தி கிடைக்கும் (ஐயப்ப)

நெய்யபிஷேகம் சாமிக்கே
ஐயனின் கருணை பூமிக்கே (ஐயப்ப)

பதினெட்டம் திருப்படி தொட்டு
பதிமுகம் காண‌ நடைகட்டு
இருமுடி கட்டு திருவடி காண‌
ஏற்றவர் போற்றும் ஜோதிமலைக்கே (ஐயப்ப)

பொற்பத‌ மேடை அற்புத‌ மேடை
நற்பத‌ மேடை நாயகன் மேடை
சங்கம் வந்தால் சாந்தி கிடைக்கும்
சக்தி கிடைத்தால் சரணம் கிடைக்கும்
சபரிக்கு வந்தால் மோட்சம் கிடைக்கும்
சற்குரு நாதன் காட்சி கிடைக்கும் (ஐயப்ப)

See Also  Kamalapaty Ashtakam In Tamil