Ayyappa Swamy Mangalam In Tamil

॥ Ayyappa Swamy Mangalam Tamil Lyrics ॥

॥ சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம் ॥
சபரிமலை தன்னில் வாழும் சாஸ்தாவுக்கு மங்களம்
தவமுனிவர் போற்றும் அந்த சன்னதிக்கு மங்களம்
இபமுகவன் முருகனுக்கு இளையனுக்கு மங்களம்
இன்பமெல்லாம் தந்தருளும் இறைவனுக்கு மங்களம்
புலி மிசையே பவனிவரும் புனிதருக்கு மங்களம்

புவிமயங்கும் மோகினியாள் புதல்வனுக்கு மங்களம்
அன்புடனே அருள்புரியும் ஐயனுக்கு மங்களம்
அழகே உருவான எங்கள் மெய்யனுக்கு மங்களம்
வெற்றிதரும் வில்லெடுத்த வேந்தனுக்கு மங்களம்
வித்தகனாம் வீரமணி கண்டனுக்கு மங்களம்

பம்பை நதி சேருகின்ற பக்தருக்கு மங்களம்
பந்தளன் பேர் பாடுகின்ற அனைவருக்கும் மங்களம்.

See Also  1000 Names Of Sri Shivakama Sundari 2 – Sahasranama Stotram In Tamil