Azhagu Karuppasamy Varaar In Tamil

॥ Azhagu Karuppasamy Varaar Tamil Lyrics ॥

॥ அய்யன் வாரார் ॥
அய்யன் வாரார்
மெய்யன் வாரார்
அழகர்மலை விட்டிறங்கி
அழகுக் கருப்பன் வாரார் – நம்ம
பதினெட்டாம் படியோன் வாரார்
பட்டாடை பளபளக்க
பவளமணி கிலுகிலுக்க
வெட்டரிவாள் வீச்சோடு

வேகமாக இங்கே வாரார் – நம்ம
தட்டட்டி கருப்பன் வாரார்
சிறப்பான முட்செருப்பு
சிரிக்கின்ற கலகலப்பு
பறக்கின்ற குதிரையோடு
பாசமுடன் இங்கே வாரார் – நம்ம
குறட்டிக் கருப்பன் வாரார்
ஓங்கிய சவுக்கோடு
உருளுகின்ற வழியோடு
தீங்கான விடம்போக்க
திட்டாணி மன்னன் வாரார் – நம்ம
ராங்கியம் கருப்பன் வாரார்

பாட்டு முழங்கிடவே
பாற்சோறு மணந்திடவே
கேட்டதைக் கொடுப்பதற்கே
கீழிறங்கி இங்கே வாரார் -நம்ம
கோட்டூருக் கருப்பன் வாரார்
பித்தலாட்டப் பேய்களையும்
பில்லி சூன்யத்தை
கொத்தாக வேரறுத்து
குலம்காக்க இங்கே வாரார் – நம்ம
கொத்தரிக் கருப்பர் வாரார்
தலையினிலே கிரீடமுடன்

தாள்களிலே சலங்கையுடன்
குலவை முழக்கமுடன்
குதித்தாடி இங்கே வாரார் – நம்ம
இளங்குடிக் கருப்பன் வாரார்
சாம்பிராணி கமகமக்க
ஜவ்வாது மணமணக்க
தேம்பலைத் துடைப்பதற்கே
தொலையானூர் அய்யன் வாரார் – நம்ம
முலங்குடி கருப்பன் வாரார்

கத்துகின்ற கடலாக
கரைகாண அன்புடனே
நித்தம் நம்மைக் காப்பதற்கே
நேசமுடன் இங்கே வாரார் – நம்ம
கொத்தங்காட்டு கருப்பன் வாரார்
சுக்குமாந் தடியேந்தி
துடிக்கின்ற மீசையோடு
மக்களைக் காத்திடவே
மன்னவனாய் இங்கே வாரார் – நம்ம
வையக் கருப்பன் வாரார்

See Also  Brihannila’S Tantra Kali 1000 Names – Sahasranama Stotram In Tamil

அந்திசந்தி நேரத்திலும்
ஆபத்து நேரயிலும்
வந்திங்கே காத்திடவே
மஞ்சனத்தி அழகன் வாரார் – நம்ம
மருதங்குடிக் கருப்பன் வாரார்
நோய்விரட்டி பேய்விரட்டி
தாய்போலச் சேய்காக்க
மாயவனின் தூயவனும்
வாழ்வளிக்க இங்கே வாரார் – நம்ம
நெய்வாச கருப்பன் வாரார்.