Enthan Thaayanavan Nenjil Seyagi In Tamil

॥ Enthan Thaayanavan Nenjil Tamil Lyrics ॥

॥ எந்தன் தாயானவன் நெஞ்சில் ॥
எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்
கருணைக் கடலானவன் நெஞ்சில்
அலையாகித் தவழ்கின்றான் தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய் தினம் பாடத்தான்
என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு
பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு

எந்தன் தாயானவன் நெஞ்சில் சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்

காற்றாட‌ கொடியாட‌ வனம் ஆடுமே
சபரி வனம் ஆடுமே
ஐயன் கண் வசத்தாலேதால்
கடல் ஏழு, ஸ்வரம் ஏழு, பிறப்பேழுதான்
உலகில் பிறப்பேழுதான்
இதில் நீ இன்றாய் இடம் ஏதுதான்
என் கண் தந்த‌ நீயே அதில் ஒளியாகிறாய்
என் குரல் தந்த‌ நீயே அதில் ஒலியாகிறாய்
உடல் தந்து உயிர் ஆகிறாய் … ஆ..அஆ .அஆ….ஆ
(எந்தன் தாயானவன் நெஞ்சில்)

பருவங்கள் மாற‌ உடல் உருமாறுமே
உள்ளம் அய்யன் அவன் நினைவாகுமே என்றும்
சரணங்கள் சொல்ல‌ ஒரு நிலையாகுமே
மனச் சலனங்கள் கலைந்தோடுமே

உன்னை அபிஷேகம் செய்யத்தான் பாலைக் கொணர்ந்தேன்
உன்னை அல‌ங்காரம் செய்யத்தான் மாலைக் கொணர்ந்தேன்
உன்னை சேவிக்க‌ என்னைக் கொனர்ந்தேன்

எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்
கருணைக் கடலானவன் நெஞ்சில்
அலையாகித் தவழ்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்
என் அய்யனே கண் மூடி நீ தூங்கிடு
பக்தர்களின் நெஞ்சத்தில் சயனித்திடு

See Also  Sri Rama Ashtottara Shatanama Stotram In Tamil

எந்தன் தாயானவன் நெஞ்சில்
சேயாகித் துயில்கின்றான்
தாலாட்டை நான் பாடத்தான்
சரணத்தை நான் தாலாட்டாய்
தினம் பாடத்தான்