Hariyum Haranum Inainthu Pettra In Tamil

॥ Hariyum Haranum iNainthu Pettra Tamil Lyrics ॥

॥ அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம் ॥
அரியும் அரனும் இணைந்து பெற்ற‌ செல்வனாம்
ஆதிபராசக்தி மகிழ் மைந்தனாம் அவன்
இணையில்லா தெய்வமவன் இன்பமளிப்பவன்
ஈடில்லா சபரிமலை வாழும் எங்கள் ஐயப்பன்
உள்ளமெனும் கோவிலிலே வாழ்பவன் அவன்
எருமேலி தனில் வாழும் எங்கள் ஈஸ்வரன்
ஏறுமயில் வேலவனின் அருமை சகோதரன்
– எங்கள் அய்யப்பன்

ஐங்கரனின் தம்பியவன் எங்கள் அய்யப்பன்
ஐந்து மலைக்கரசன் அவன் எங்கள் அய்யப்பன்
ஓம்காரப் பொருளென்னும் வேத‌ நாயகன்
– எங்கள் அய்யப்பன்

See Also  Ashtavakra Gita In Tamil