Kaakum Deivame Engal Karuppasami In Tamil

॥ Kaakum Deivame Engal Karuppasami Tamil Lyrics ॥

॥ காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே ॥

காக்கும் தெய்வமே – எங்கள் கருப்ப தெய்வமே – நாங்கள்
நோக்கும் இடமெல்லாம் உந்தன் வீரத்தோற்றமே… (காக்கும்)

அள்ளிச் சொருகிய – மலர் அழகுக் கொண்டையும் – வளர்
துள்ளு மீசையும் – உந்தன் எழிலைக் கூட்டுதே; (காக்கும்)
பகையழித்திடும் – சிறந்த பரந்த தோள்களும் – நல்ல
கருத்த மேனியும் – உந்தன் வலிமை காட்டுதே…  (காக்கும்)
காடு வீடெல்லாம் – உந்தன் காவலில் உண்டு – உயர்
படி பதினெட்டும் – உந்தன் பார்வையிலுண்டு…(காக்கும்)

ஜாதி மல்லிகை – உயர்சாந்து ஜவ்வாது மணக்கும்
சாம்பிராணியும் – உந்தன் வரவைக் கூறுதே… (காக்கும்)
சாய வேட்டியும் – உயர் ஜரிகைப் பட்டுமே – உந்தன்
மேனி அழகிலே – தவழ்ந்து மின்னச் ஜொலிக்குதே… (காக்கும்)
வெள்ளைக் குதிரையும் – உயர் வீச்சரிவாளும் – நல்ல
தண்டைகிண்கிணி முழங்க இங்கு வாருமே…. (காக்கும்)

See Also  Sri Sadashiva Ashtakam In Tamil