Kannale Paaru Maiyya Kannale Paarumaiyya In Tamil

॥ Kannale Paaru Maiyya Kannale Paarumaiyya Tamil Lyrics ॥

கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா

பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா

ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

ஐயா உன் திருமேனி வழிகின்ற‌ நெய்யாகி
கண்டத்து மணியாகி ச‌ந்தனம் நானாகும்
அக்காலம் என்றென்று காத்திருப்பேனே
ஆவல் கொண்டு ஆண்டாண்டு மலை வந்தேனே
உருகி நின்றேனே அவ‌யம் கேட்டேனே

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

மணிகண்டன் புகழாரம் பொழுதெல்லாம் சூடாமல்
சாஸ்தா உன் திருநாமம் வாயாரப் பாடாமல் மண் மேலே
ஒருபோதும் நான்தான் வாழ்வேனா
தடுத்தாலும் மாலை போடாமல் இருப்பேனா
உன்னை மறப்பேனா மனதில் நிறைப்பேன் நான்

சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ
கண்ணாலே பாருமைய்யா கண்ணாலே பாருமைய்யா
இல்லாமைத் தீரும் ஐயா இருளோடிப் போகுமய்யா
பொன்னேதும் வேணாமைய்யா பொருளேதும் வேணாமைய்யா
உன்பாதம் சேரும் அந்த‌ திருநாளே போதும் ஐயா

ஏழைப் பங்காளா எம்மை ஏற்றி விடக் கூடாதா
பக்தர்கள் நாங்கள் போடும் கோஷங்கள் கேட்காதா
சரணங்கள் கேட்காதா
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ
சாமி சரணம் சொல்லுங்கோ ஐயப்ப‌ சரணம் சொல்லுங்கோ (கண்ணாலே பாருமைய்யா)

See Also  Emoko Chigurutadharamuna In Tamil