Kuzhathupulaiyil Unnai Kandal In Tamil

॥ Kuzhathupulaiyil Unnai Kandal Tamil Lyrics ॥

குளத்துப்புழையில் உன்னைக் கண்டால்
குடும்பம் தழைக்குமே எங்கள்
குடும்பம் தழைக்குமே
அச்சன் கோவிலில் ஐயனைக் கண்டால்
அச்சம் விலகுமே எங்கள்
அச்சம் விலகுமே (குளத்துப்புழையில்)

ஆரியங்காவில் பூசைகள் செய்தால்
அன்புகிடைக்குமே அவன் ஆசி கிடைக்குமே
கோரியபடியே யாவும் கிடைக்கும்
குலம் செழிக்குமே நம்ம‌
குலம் செழிக்குமே (குளத்துப்புழையில்)

பந்தள‌ நாட்டு பாலன்மீது பாடல் பிறக்குமே
ஒரு பாடல் பிறக்குமே
பக்தி நெறியில் பாடும் போது சாந்தி கிடைக்குமே
அழுதை நதியில் களங்கம் தீர‌ குளிக்க‌ வேண்டுமே
அன்பர் குளிக்க‌ வேண்டுமே
குளிக்கும் வேளை அகத்திலுள்ள‌ ஐயம்
அகலுமே நல்ல‌ அறிவு பெருகுமே (குளத்துப்புழையில்)

பம்பையிலே நீராடி விளக்கை ஏற்று
பலனும் கிடைக்குமே நல்ல‌
பயனும் கிடைக்குமே
சபரிமலையின் மகரஜோதி வானில் தெரியுமே
நம் வாழ்வில் தெரியுமே
படிகள் ஏறி அவனைக் காண‌ அபயம் கிடைக்குமே
அவன் சரணம் கிடைக்குமே
துதிகள் பாடி தரிச்ப்போருக்கு ஞானம்
பிறக்குமே அஞ்ஞானம் மறக்குமே (குளத்துப்புழையில்)

See Also  Alli Tharum Pillaiyarai Kumbiduvomey In Tamil – அள்ளித்தரும் பிள்ளையாரை