Magishiyaik Kondravanae Ayyappaney In Tamil

॥ Magishiyaik kontravanae ayyappanae Tamil Lyrics ॥

॥ மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே ॥
ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம்
ஐயப்ப திந்தக தோம் தோம் சாமி திந்தகதோம்
திந்தக திந்தக திந்தக தோம் தோம்

மகிஷியைக் கொன்றவனே ஐயப்பனே
மனசார நினைத்து ஆராதித்தேன்
கன்னிசாமி கூட்டமும் குருசாமி கூட்டமும்
பம்பை கொட்டி கைகள் தட்டி பேட்டை துள்ளி (ஐயப்பதிந்தக)

வாபரின் பள்ளிதனில் காணிக்கை போட்டு
வாபரைத் தம்முடைய துணையாய் வாழ்த்தி
அம்பலப் புழை கிருஷ்ணனை சாட் வைத்து கூட்டம்
தெப்பந்திருப் பார்ப்தோரு தொடங்கினோம் துள்ளல் (ஐயப்ப)

சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சாமி பாதம் ஐயப்ப பாதம் ஐயப்ப பாதம் சாமிபாதம்
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
பகவானே பகவதியே
கற்பூரதீபம் சாமிக்கே -நெய்யபிஷேகம் சாமிக்கே

அப்பனாம் சிவபெருமான் கண்கள் திறக்க
உச்சிவேளை நட்சத்திரம் பூத்து விளங்க
ஐயப்ப சாமியின் அபிஷேகம் பார்க்க
ஆடிவரும் கூட்டம் மலையேறிச் சென்றோம்

ஐயப்பதிந்தக தோம் சாமி திந்தகதோம்
சாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் (மகிஷி)

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Magishiyaik Kondravanae Ayyappaney in English

See Also  Sivarchana Chandrikai – Mugavaasam In Tamil