Pallikattu Sabarimalaikku In Tamil

॥ Pallikattu Sabari Malaikku Tamil Lyrics ॥

॥ பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ॥
இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் எமனையும் வெல்லும் திருவடியை காண‌ வந்தோம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ
சுவாமி சரணம் அய்யப்ப‌ சரணம் (2வது முறை சப்தம் குறைவாக‌)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

நெய்யபிஷேகம் சுவாமிக்கே
கற்பூர‌ தீபம் சுவாமிக்கே
ஐய்யப்பன்மார்களும் கூடிக்கொண்டு
அய்யனை நாடி சென்றிடுவார்
சபரி மலைக்கே சென்றிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த‌ சாரதியின் மைந்தனே உனை
பார்க்க‌ வேண்டியே தவமிருந்து(2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரைத் தொழுது
ஐயனின் அருள் மலை ஏறிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஏறும்போது
அரிஹரன் மகனை துதித்து செல்வார்
வழிகாட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்
கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணைக் கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருந‌தி பம்பையை கண்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய‌ நதியாம் பம்பையில் நீராடி
சங்கரன் மகனை கும்பிடுவார் சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

See Also  Asitha Krutha Shiva Stotram In Tamil

தேக‌ பலம் தா பாத‌ பலம் தா
தேக‌ பலம் தா பாத‌ பலம் தா (சத்தம் குறைவாக‌)

தேக‌ பலம் தா என்றால் அவரும்
தேகத்தை தந்திடுவார்
பாத‌ பலம் தா என்றால் அவரும்
பாதத்தை தந்திடுவார் நல்ல‌
பாதையை காட்டிடுவார் (சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திருவார்
சபரி அன்னையை பணிந்திடுவார்
சரங்குத்தி ஆலில் கன்னிமார்களும்
சரத்தினை போட்டு வணங்கிடுவார்
சபரிமலைதனை நெருங்கிடுவார்

பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவரை சரணடைவார்
மதிமுகம் கண்டே மயங்கிடுவார்
அய்யனை துதிக்கயிலே
தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமியே ஐயப்போ ஐயப்போ சுவாமியே

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா (6)

– Chant Stotra in Other Languages –

Ayyappa Song » Pallikattu Sabarimalaikku in English