Panthalathu Rajanukku Paatedupom Vaank In Tamil

॥ Panthalathu Rajanukku Paatedupom Vaank Tamil Lyrics ॥

॥ பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் ॥
சாமியே சரணம் ஐயப்போ சத்குரு நாதனே சரணம் ஐயப்போ ……….

பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌

சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌
(குழு: சத்குரு நாதனே சரணம் ஐயப்போ)
மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌
சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌
மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌ (2)

வாவர் தோழன‌ வணங்கிட‌ வேண்டியே
பந்தள‌ இராசன‌ பாத்திட‌ வேண்டியே
கால‌ அதிகால‌ நல்ல‌ கார்த்திகையில் நாங்களே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)
சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌
மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

வெள்ளி முளைக்கும் வேளையில‌ கண் முழிச்சோம் சாமி
வள்ளியோட‌ கொளுந்தனார‌ வணங்கிபுட்டோம் சாமி (2)
வெட‌ வெட‌ குளிரில‌ குளிச்சது தெரியல‌
நாப்பது நாளுமே நகந்தது தெரியல‌
போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)
சாமி குரு சாமிகிட்ட‌ போட்டுகிட்டோம் மால‌
மால‌ மணி மால‌ நல்ல‌ துளசிமணி மால‌

திம்தகத்தோம் திம்தகத்தோம் திம்தகத்தோம் தோம் தோம்

ஆயுசு காலம் மட்டும் மாமலைக்குப் போவோம்
அம்பலத்தான் பெருமையத்தான் பூமி எங்கும் சேர்ப்போம் (2)

See Also  Yajnvalkya Gita From Mahabharat Shanti Parva Ch 310-318 In Tamil

இருமுடி தாங்கியே ஒரு மனதாகியே
திருமல‌ ஏறியே திருவருள் வாங்கவே
போவோம் மல‌ போவோம் ஐயன் ஆண‌ இட்ட‌ நாளிலே
பந்தளத்து இராஜனுக்கு பாட்டெடுப்போம் வாங்க‌
நம் குலத்து தேவனுக்கு நோன்பிருப்போம் வாங்க‌ (2)