Parameswaran Vazhum Malai Kailayam In Tamil

॥ Parameswaran Vazhum Malai Kailayam Tamil Lyrics ॥

॥ பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம் ॥
பரமேஸ்வரன் வாழும் மலை கைலாயம்
பரமதயாளன் வாழும் மலை திருப்பதி
பல்வளம் அருளும் மலை ஐயப்பன்
வாழும் மலை சபரிமலை!

சஞ்சலம் தீர்க்கும் சபரியின் மைந்தனே
உன் சகோதரன் சுப்பிரமணியன்
வாழும் மலை சுவாமிமலை!

சுவாமி சரணம் அடியவர்க்கருளும்
கலியுகம் தன்னிலே சபரிமலை
சாஸ்தாவின் மலை சபரிமலை!

சபரிமலையை ஆளும் நாதன்
சகல நலன்கள் தரும் குருநாதன்!

காக்கும் கரத்தவன் காட்டில் கிடைத்தவன்
கற்பூரப் பிரியன் கானகவாசன்
கடிதில் வந்தருளும் தவசீலன்!

See Also  Shiva Bhujanga Prayatha Stotram In Tamil