Saamikale Saamikale Saranam Sollungka In Tamil

॥ சாமிகளே சாமிகளே சரணம் Tamil Lyrics ॥

॥ சாமிகளே சாமிகளே சரணம் ॥
சாமிகளே சாமிகளே சரணம் சொல்லுங்க – அந்த
சபரிமலை ஐயனுக்கு சரணம் சொல்லுங்க.

குளத்துப்புழை பாலனுக்கு,சரணம் சொல்லுங்க
நம் குறைகள் எல்லாம் தீர்த்துவைப்பான்,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)

பந்தளத்து ராஜனுக்கு, சரணம் சொல்லுங்க – நம்
பாவமெல்லாம் போக்கிடுவான் சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
எரிமேலி சாஸ்தாவுக்கு, சரணம் சொல்லுங்க – அவன்
என்றென்றும் காத்திடுவான் சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
அழுதையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்க
அங்கே சபரி ஐயன் வந்தருள்வான்
(சாமிகளே)
கரிமலையில் ஏறும்போது சரணம் சொல்லுங்க
நம் கவலைகளை தீர்திடுவான்,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)

பம்பையிலே ஸ்நானம் செய்து,சரணம் சொல்லுங்க
சாமி பக்தியுடன் கூடி நின்று,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
நீலிமலை ஏறும்போது,சரணம் சொல்லுங்க
ஐயன் நேரில் வந்து அருள் புரிவான்,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
பதினட்டாம் படி ஏறி சரணம் சொல்லுங்க
கருப்பன் பாங்குடனே காத்திடுவான்,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
மஞ்சள் மாதா சன்னதியில் சரணம் சொல்லுங்க
அம்மா மன இறங்கி அருள் புரிவாள் சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
வாவர்சாமி சன்னதியில்,சரணம் சொல்லுங்க
வாவர் வாஞ்சயுயுடன் காத்திடுவான்,சரணம் சொல்லுங்க
(சாமிகளே)
பக்தியுடன் கூடி கூடி சரணம் சொல்லுங்க
ஐயன் பஜனைக்கு வந்திடுவான் சரணம் சொல்லுங்க
(சாமிகளே) ஆமாம்
(சாமிகளே)
(சாமிகளே)

See Also  Akhilandeshwari Stotram In Tamil