Sabarimalayil Vanna Chandrodayam In Tamil

॥ Sabarimalayil Vanna Chandrodayam Tamil Lyrics ॥

சபரிமலையில் வண்ண சந்திரோதயம் தர்ம
சாஸ்தாவின் சந்நிதியில் அபிஷேகம்

கோடிக்கண் தேடிவரும் ஐயப்பனை…நாமும்
கும்பிட்டுப் பாடுகின்றோம் என்னப்பனை (சபரி)

பாலெனச் சொல்லுவதும் உடலாகும் – அதில்
தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும்
வெண்ணெய் திரண்டதுந்தன் அருளாகும்…. இந்த
நெய் அபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா…இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும்
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

வாசமுடைய பன்னீர் அபிஷேகம்… எங்கள்
மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் – அதில்
இனிய பஞ்சாமிர்தத்தின் அபிஷேகம்
இன்பத்தைக் கூட்டுதய்யா உன் தேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா – இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)
உள்ளத்தின் வெண்மைதன்னைக் கையிலெடுத்து – அதில்
உன் பெயரைக் குழைத்து நெற்றியிலிட்டு
உருகும் விபூதியினால் அபிஷேகம்…ஹரி
ஓம்மென்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழுகடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா – இந்த
ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா (சபரி)

– Chant Stotra in Other Languages –

Ayyappan Song » Sabarimalayil Vanna Chandrodayam in English

See Also  Ayyappa Swamy 108 Sharanam Ghosham In English