Sakthi Velan Netriyile In Tamil

॥ Sakthi Velan Netriyile Tamil Lyrics ॥

॥ சக்தி வேலன் நெற்றியிலே ॥
சக்தி வேலன் நெற்றியிலே
சார்ந்திருக்கும் வெண்ணீறு
சுற்றி வரும் பகை துரத்தும்
தொல்லையெல்லாம் உடனகற்றும்)
(சக்தி வேலன் … )

சஷ்டியிலே தவமிருந்தால்
சாந்தி எனும் அருமருந்து (2)

நிஷ்டை இன்றி கிட்டிவரும்
நினைப்பதெல்லாம் கைகூடும் (2)

(சக்தி வேலன் … )
ஆறெழுத்தை நாள் தோறும்
அயராமல் கூறிவந்தால்
வேறெதற்கும் பயம்வேண்டாம்
வீரர்களாய் வாழ்ந்திடலாம் (2)

நாதத்தின் உட்பொருளாய்
நம்நெஞ்சில் வீற்றிருப்பான் (2)

பாதத்தை பற்றிடுவோம்
பாசத்தை விட்டிடுவோம்

(சக்தி வேலன் … )
தங்க மயில் ஏறி வரும்
ஷண்முகனின் வடிவேலில்
தைப்பூச நாளினிலே
சாற்றிடுவோம் மலர்மாலை

அங்கமெல்லாம் ஒளிவீசும்
அழகன் அவன் மேனியெல்லாம் (2)

சந்தணத்தால் மணந்திடவே
தனி அழகு பார்த்திடுவோம்
(சக்தி வேலன் … ).

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Sakthi Velan Netriyile Lyrics in English

See Also  Shri Subrahmanya Dandakam In English