Selva Muthu Kumaran Avan In Tamil

॥ Selva Muthu Kumaran Avan Tamil Lyrics ॥

॥ செல்வ முத்துக் குமரன் ॥

செல்வ முத்துக் குமரன் அவன்
தமிழ் தெய்வமாகிய முருகன் அவன்
(செல்வ … )

உள்ளம் கவர்ந்தக் கள்வனவன்
உள்ளம் கவர்ந்தக் கள்வனவன்
என் உயிரில் கலந்தக் கந்தன் குகன்
(செல்வ … )

புள்ளிருக்கும் வேளூரில்
பசும் பொன்னும் மணியும் போர்த்திருப்பான் (2)
வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய்
வள்ளிக் குஞ்சரி வலம் இடமாய்
சுடர் வண்ணம் மின்ன வீற்றிருப்பான் (2)
(செல்வ … )
(உள்ளம் … )
(செல்வ … )

விழிக்கும் மொழிக்கும் விளங்கு துணை
அவன் வேலும் மயிலும் நாளும் துணை (2)

களிக்கும் நெஞ்சில் காட்சி துணை
களிக்கும் நெஞ்சில் காட்சி துணை
கந்தன் கருணை என்றும் வாழ்வின் துணை (2)

(செல்வ … )
(உள்ளம் … )
(செல்வ … ) (2).

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Selva Muthu Kumaran Avan in English

See Also  Ayyappa Ayyappa Entrunai Paadi In Tamil