Sivarchana Chandrika – Aanma Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆன்ம சுத்தி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஆன்ம சுத்தி

ஆன்மசுத்தியானது பூசிப்பவனான சீவனைச் சிவமாகப் பாவனைசெய்யும் சீவசுத்தி ரூபமாயும் பூசிப்பவனுடைய தேகத்தைச் சிவதேகமாகப் பாவிக்கும் தேகசுத்தி ரூபமாயும், இருவகைப்படும்.

அவற்றுள், சீவசுத்தி முறை வருமாறு:- மூன்று முறை பிராணாயாமஞ்செய்து தேகத்தினுள்ளிருக்கும் அசுத்தவாயுவை ரேசகரூபமான மூன்று பிராணாயாமத்தால் அஸ்திரமந்திரத்தை உச்சரித்து வெளியில் விட்டு, வெளியிலிருக்கும் வாயுவால் வயிற்றை நிரப்பி இருகால் கட்டைவிரல் முதற்கொண்டு மூலாதாரம் வரையிரண்டாகவும், மூலாதாரத்திற்மேல் பிரமரந்திரம் வரை ஒன்றாகவும் இருப்பதாயும், கீழே முகத்தையுடைய தாமரைகளின் மொட்டுக்களுடன் கூடினதாயும், சரீரத்தின் நடுவில் அதிசூக்குமாயும், மின்னற்கொடிபோல் பிரகாசிக்கிறதாயும், உள்ளே துவாரத்தையுடையதாயும், உள்ள சுழுமுனா நாடியைத் தியானித்து, அதன் நடுவில் ஹ§ம் என்னும் சிகாமந்திரத்தின் பீஜாக்கரத்தைப் பிரகாசிப்பதாகத் தியானஞ்செய்து, இருதயம், கழுத்து, அண்ணம், புருவநடு, பிரமரந்திரமென்னும் இவற்றில் கீழே முகத்தை வைத்துக்கொண்டிருக்கும் தாமரை மொட்டுக்களைப் பூரக கும்பகரேசகங்களால் விரியச் செய்யப்பட்டவையாயும், உயரே முத்தையுடையவையாயும் பாவித்து, மூலாதாரத்தில் தீபத்தின் ஜ்வாலைபோல் ஜொலிக்கின்ற ஹ¨ங்காரத்தை ஹும்பட்என்னும் மந்திரத்தின் பன்முறை உச்சாரணத்தினால் உயரே எழும்புவதாகத் தியானித்து அதனால் பிரமம் முதலிய ஐந்து முடிச்சுக்களின் ரூபமான தாமரைத் தண்டின் முடிச்சுக்களாகப் பாவனைசெய்து, ஹ¨ங்காரத்தைத் திருப்பி வாயுவை வெளியில் விடவேண்டும்.

மீண்டும் ஹ்ருங்காரத்தை மூலாதாரத்தில் தியானஞ்செய்து பூரகவாயுவினால் கொண்டவரப்பட்டதாயும், சரீரமுற்றும் வியாபகமான சைதன்னியத்தையுடையதாயும், இருதயகமலத்திலிருப்பதாயும், புரியட்டகரூபமான சூக்குமதேகத்துடன் கூடினதாயுமுள்ள சீவனைப் புரியட்டக தேகத்தினின்றும் பிரித்து பிரகாசிக்கின்ற நக்ஷத்திரத்தின் வடிவம்போல் வடிவத்தையுடையதாயும், மிகவும் சூக்குமமாயும், ஒன்றாயுமிருக்கும் சீவனை ஹாம் என்னும் இருதய பீஜாக்கரமாகிய சம்புடத்தில் வைத்து, ஹ¨ங்காரத்தை சிரசில் வைத்துக் கும்பகஞ்செய்து வாயுவை உயரே போக்கிச் சங்காரமுத்திரையால் அந்தச் சீவனை துவாதசார்ந்தம் வரை கொண்டுபோய் துவாதசாந்தத்தின் மேலிருக்கும் பரமசிவனிடத்தில் சேர்க்க வேண்டும்.

See Also  1000 Names Of Sri Lalita Devi In Tamil

இவ்வாறு செய்தலால் சீவன் தூலசூக்குமருபமான அசுத்த தேக உபாதியினின்றும் விடுபட்டவனாய் சிவசாயுச்சியத்தாலடையப்பட்ட நின்மலமான ஞானக்கி£¤யாசத்திகளுடன் கூடிச் சுத்தனாக ஆகின்றான். அல்லது சீவனை துவாதசாந்தம் வரை கொண்டுபோய் பரமசிவனிடத்திற்சேர்க்க இயலாதவர் இருதய கமத்திலிருக்கும் சத்திமண்டலமாகிய சம்புடத்தில் வைத்துப் பூதசுத்திசெய்யுங்காலத்தில் செய்யப்படும் தேகதகனத்தால் கெடாது இரக்ஷிக்கவேண்டும். இவ்வாறு செய்யுங்கால் அடியிற்கண்டவாறு செய்தல் வேண்டும்.

இருதயகமலங்களின் கர்ணிகையின் மேல் ஹாம் சூரியமண்டலாய நம: ஹாம் சோமமண்டலான நம: ஹாம் அக்கினிமண்டலாய நம: ஹாம் சத்திமண்டலாய நம: என்று நியாசஞ் செய்து, ஹாம் ஹம் ஹாம் ஆத்மனே நம: என்ற மந்திரத்தை உச்சரித்து தேகத்தில் வியாபகமாயிருக்கும் சீவனை வியாபகம் ஒடுங்கியிருப்பதாயும், பிரகாசிக்கின்ற நக்ஷத்திரங்களின் சொரூபம்போல் சொரூபமுடையதாயும், தியானஞ்செய்து, அந்தச் சிவனை சத்தி மண்டலத்திற்குமேல் வைத்து, அதற்குமேல் சத்திமண்டலம், அக்கினிமண்டலம், சந்திரமண்டலம், சூரியமண்டலமென்னும் இவற்றை முறையே நியாசஞ்செய்து, மேலுங்கீழுமுள்ள இரண்டு சத்திமண்டங்களினின்றும் பெருகும் அமிர்தப்பிரவாகத்தால் நனைக்கப்பட்டதாகப் பாவனைசெய்யவேண்டும். இவ்வாறு சீவனுக்கு ர¬க்ஷயை மாத்திரம் செய்யவேண்டும். (சீவசத்தி என்பதற்கு இவ்விடத்தில் சீவர¬க்ஷ என்பது பொருள்.) தீக்ஷ£காலத்திலேயே சீவன் சுத்தனாயிருத்தலால் நாடோறுஞ்செய்யும் பூஜாசமயத்தில் சுத்திசெய்ய வேண்டுவதில்லை.