Sivarchana Chandrika – Aavarana Pujai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – ஆவரணபூஜை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
ஆவரணபூஜை

ஆவரணபூஜை வருமாறு:- பஞ்சப்பிரமம், சடங்கங்களை முதலாவரணத்திலும், வித்தியேசுவரர்களை இரண்டாவது ஆவரணத்திலும் கணநாதர்களை மூன்றாவது ஆவரணத்திலும், உலக பாலகர்களை நான்காவது ஆவரணத்திலும், அவர்களுடைய ஆயுங்களை ஐந்தாவது ஆவரணத்திலும், இவ்வாறு ஐந்து ஆவரணங்களிலும் பூஜிக்க வேண்டும்.

சிவாசனபத்மத்தின் கர்ணிகையில் சிவனையருச்சித்து, அந்தப் பத்மதளத்தின் மூலங்களிலும், நடுவிலும், தளத்தின் துனிக்கும் நடுவிற்கும் நடுவிலும், தளத்தின் நுனியிலும், தளத்தின்கீழ் பாகத்திலும், ஐந்து ஆவரணங்களையும் பூஜிக்க வேண்டும்.

அல்லது சிவாசனபத்மதளத்தின் மூலரூபமான இலிங்கத்தின் மூலபாகங்களிலும், சிவாசனபத்மதளத்தின் நுனிரூபமான பீடத்தின் மேற்பாகமென்னும் நுனிகளிலும், பீடத்தின் கண்டத்திலும், பீடத்தின் அடியிலும், பிரமபாகமாகி பத்மபீடத்திலுமாக ஐந்து ஆவரணங்களை யருச்சிக்க வேண்டும்.

See Also  Narayaniyam Pancamadasakam In Tamil – Narayaneeyam Dasakam 5