Sivarchana Chandrika – Anganiyasam In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – அங்கநியாசம் ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
அங்கநியாசம்

வலது கைக்கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்சிவாசனாய நம: என்று உச்சரித்துக்கொண்டு, தேகத்தின் மத்தியிலாவது அல்லது இருதயத்திலாவது மூலாதாரத்திலிந்துண்டாண வெண்மையான சிவாசன பத்மத்தை நியாசஞ செய்து ஓம் ஹாம் ஹம்ஹாம் சிவமூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கிழங்கிருக்கும் நாபி முதலாகாவாவது இருதயமுதலாகவாவது புருவ நடுவரை தேஜஸ் சொரூபமான சிவனுடைய சூக்குமமூர்த்தியை நியாசஞ்செய்து, நான்கு விரல்களையும் மடக்கி முஷ்டி செய்து கட்டைவிரலால் ஈசானமூர்த்தாய நம: என்னும் மந்திரத்தை சிரசில் நியாசஞ்செய்து, கட்டை விரலுடன் கூடின சுட்டுவிரல் முதலிய விரல்களால் முகம், இருதயம், குய்யம், பாதம் என்னுமிவைகளில் தத்புருஷ முதலிய மந்திரங்களை முறையே நியாசஞ்செய்து புருவ நடுமுதல் பிரமரந்திரமீறாக ஹாம்ஹெளம் வித்தியா தேஹாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து வித்தியாதேகத்தை நியாசஞ்செய்து, நேத்திர மந்திரத்தை நேத்திரங்களில் மத்தியிலுள்ள மூன்று விரல்களால் நியாசஞ்செய்து அந்த வித்தியாதேகத்தில் கட்டைவிரல் அணிவிரல்களால் ஹாம்ஹெளம் சிவாய நம: என்று உச்சரித்துப் பரமசிவனை ஆவாகனஞ் செய்ய வேண்டும்.

பின்னர் இருதயம், சிரசு, சிகையென்னுமிவைகளில் கட்டை விரல்களுடன் கூடின சுண்டுவிரல், அணிவிரல், நடுவிரல்களால் இருதய சிரசு சிகாமந்திரங்களை நியாசஞ்செய்து, கழுத்துமுதல் மார்பு நடுவரை மறைத்தல் ரூபமாக கவசமந்திரத்தைச் சுட்டு விரல்களால் நியாசஞ்செய்து, கைகளில் அஸ்திரமந்திரத்தை அணிவிரல் கட்டை விரல்களால் மூன்று முறை நியாசஞ் செய்ய வேண்டும். எல்லா மந்திரங்களும் நம: என்னும் பதத்தை இறுதியிலுடையனவாக இருத்தல் வேண்டும். அஸ்திரமந்திரம் மாத்திரம் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடையதாக இருத்தல் வேண்டும்.

See Also  Thanigaimalai Perundhuraiye … Va Va Va In Tamil

பின்னர் ஹும்பட்என்னும் பதத்தை இறுதியினுடைய அஸ்திர மந்திரத்தால் மூன்று முறை தாளஞ்செய்து திக்குபந்தனஞ்செய் கவசமந்திரத்தால் சுற்றி வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய மூலமந்திரத்தால் மகாமுத்திரையைக் காண்பிக்கவேண்டும்.

மகாமுத்திரையாவது சிரசு முதல் பாதம் ஈறாக இருகைகளாலும் பரிசித்தல்.

பின்னர் தன்னைச் சிவனுக்குச் சமானமாகப் பாவித்துக்கொள்ளல் வேண்டும். இவ்வாறு அங்க நியாசஞ்செய்து, பட்டம், தலைப்பாகை, கவசம், கைகளில் அஸ்திரம் என்னுமிவைகளைத் தரித்து யுத்தவீரன்போல் துஷ்டர்களால் தீண்டத்தகாதவனாக ஆகின்றான். சகளீகரணம் முடிந்தது.