Sivarchana Chandrika – Thathuva Suththi In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – தத்துவ சுத்தி ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
தத்துவ சுத்தி

பின்னர் தத்துசுத்தி ரூபமான தேகசுத்தியை செய்ய வேண்டும். அது வருமாறு:-

பிரகிருதி, அகங்காரம், புத்தி, மனம், சுரோத்திரம், துவக்கு, கண், நாக்கு, மூக்கு, வாக்கு, கை, கால், பாயு, உபத்தம், சத்தம், பரிசம், உருவம், இரதம், கந்தம், ஆகாயம், வாயு, அக்கினி, அப்பு, பிருதிவி என்னும் இந்தத் தத்துவங்களின் ரூபமாயும், அருவமாயும், அசுத்தமாயுமிருக்கும் ஆன்ம தத்துவ ரூபமாகத் தூலதேகத்தையும், மாயை, கலை, வித்தை, அராகம், காலம், நியதி, புருடனென்னும் தத்துவங்களின் ரூபமாயும், சுத்தாசுத்தமாயுமிருக்கும் வித்தியாதத்துவரூபமாகச் சூக்குமதேகத்தையும், சிவம், சத்தி, ஈசுவரம், சதாசிவம், சுத்தவித்தை என்னும் தத்துவங்களின் ரூபமாயும், சுத்தமாயுமிருக்கும் சிவதத்துவ ரூபமாகப் பரதேகத்தையும் பாவித்து தூலதேகத்தைச் சூக்கும தேகத்திலும், சூக்கும தேகத்தைப் பரதேகத்திலும் லயிக்கச் செய்தல் வேண்டும்.

கூறப்பட்ட சுத்திகளுள் யாதானுமொன்றை அனுட்டித்த பின்னர் ஹெளம் சாந்தியதீ தகலாயை நம: என்பது முதலிய மந்திரங்களால் சூக்குமமான ஐந்து கலைகளின் ரூபமாயிருக்கும் சுத்தமான சூக்கும சரீர சிருட்டியையும் ஐந்து கலாமந்திரங்களினாலேயே தூலமான ஐந்து கலைகளின் ரூபமாயிருக்கும் தூலதேகத்தின் சிருட்டியையும் அவ்வவற்றின் குணங்கள் நாசமடைந்த முறையில் பாவனை செய்து ஹாம் சத்தயே வெளஷட் என்னும் மந்திரத்தால் சக்தி மண்டலத்தினின்றும் பெருகின அமிர்ததாரையால் அவற்றை நனைக்க வேண்டும்.

பின்னர் இருதயத்திலிருக்கும் கமலத்தின் கர்ணிகையில் ஹாம் ஆதாரசக்தயே நம:, ஹாம் தர்மாய நம:, ஹாம் ஞானாய நம:, ஹாம் வைராக்கியாய நம:, ஹாம் ஐசுவரியாய நம:, ஹாம் பத்மாய நம: என்னும் மந்திரங்களால் நடுவிலும் ஆக்கினேய முதலிய நான்கு கோணங்களிலும், மறுபடியும் நடுவிலும், ஷடுத்தாசனத்தை நியாசஞ் செய்து அதில் தூல சூக்கும தேகரூபமாயும், பிரிவுபடாத கைகால் முதலியவற்றின்ரூபமாயுமிருக்கும் மூர்த்தியை ஹாம் ஹம் ஹாம் ஆத்ம மூர்த்தயே நம: என்னும் மந்திரத்தால் நியாசஞ் செய்து ஹெளம் வித்தியாதேகாய நம: என்னும் மந்திரத்தால் முப்பத்தெட்டுக் கலைகளின் ரூபமாயிருக்கும் சதாசிவ ரூபத்தைத் தியானித்து சிவாய நம: என்னும் மந்திரத்தால் துவாதசாந்தத்தி- லிருக்கும் பரமசிவ சாயுச்சியத்தையடைந்ததாயும், நிர்மலமான ஞானசத்தி, கிரியாசத்திகளையுடையதாயும், பதியினுடைய சரீர ரூபமாயுமிருக்கும் ஜீவான்மாவை சதாசிவ ரூபத்தில் ஆவாகனஞ் செய்து இருதய முதலிய தானங்களில் இருதய முதலிய மந்திரங்களை நியாசஞ் செய்து மூலமந்திரத்தால் பரமீகரணஞ் செய்து வெளஷடு என்னும் பதத்தை இறுதியிலுடைய சத்தி மந்திரத்தால் துவாதசாந்தத்திலிருக்கும் சத்தி மண்டலத்தினின்றும் பெருகின அதிகமான அமிர்ததாரையால் அபிஷேகஞ் செய்ய வேண்டும்.

See Also  Sri Shiva Ashtakam 2 In Tamil

பின்னர் தண்டநியாசம், முண்டநியாசம், வக்திரநியாசம், கலாநியாசம், ஸ்ரீகண்ட நியாச முதலிய நியாசங்களைச் செய்ய வேண்டும்.

நியாசஞ் செய்யும் முறை வருமாறு:- சிவாசனத்தையும் அவ்வியக்தமான சிவ மூர்த்த்தியையும் இருதயத்தில் நியாசஞ் செய்ய வேண்டும். ஹோம் ஈசான மூர்த்தாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து முஷ்டியுடன் கூடின கட்டைவிரலின் நுனியால் சிரசில் நியாசஞ் செய்யவேண்டும். ஹேம் தத் புருஷவக்திராய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் சுட்டுவிரல்களால் முகத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹ§ம் அகோர ஹிருதயாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் நடுவிரல்களால் இருதயத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹிம் வாமதேவ குஹ்யாய நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் அணி விரல்களால் குஹ்யத்தில் நியாசஞ் செய்யவேண்டும். ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம: என்னும் மந்திரத்தை உச்சரித்து கட்டைவிரல் கடைவிரல்களால் காலில் நியாசஞ்செய்ய வேண்டும். ஹோம் ஈசானாய ஊர்த்துவ வக்திராய நம:, ஹேம் தத்புருஷாய பூர்வவக்திராய நம:, ஹ§ம் அகோராய தக்ஷிணவக்திராய நம:, ஹிம் வாமதேவாய உத்தரவக்திராய நம:, ஹம் சத்தியோசாதாய பச்சிம வத்திராய நம: என்று ஊர்த்துவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் தானங்களிலுள்ள முகங்களில் முன்னர்க் கூறியவாறு அந்தந்த விரல்களால் நியாசஞ் செய்ய வேண்டும்.

இவ்வாறு தண்டநியாசம் வக்திரபங்கிநியாசங்களைச் செய்த பின்னர் கலைகளை சத்திகளுடன் கூடினவையாகவாவது சத்திகளுடன் கூடாதவையாகவாவது பின்னர்க் கூறப்படுந்தானங்களில் தீக்ஷை செய்யப்பெற்ற பிராமணர் நியாசஞ் செய்யவேண்டும். க்ஷத்திரியரும் வைசியரும் இந்த நியாசத்தை வேறுயுகத்தில் செய்யலாம். இவர்களைத்தவிர மற்றவர்கள் சத்திகளையே நியாசஞ் செய்ய வேண்டும்.

See Also  Narayaniyam Saptasiitamadasakam In Tamil – Narayaneyam Dasakam 88

சத்தியோடுகூடிய கலாநியாசம் வருமாறு:-

ஹோம் சசின்யை நம: ஹோம் அங்கதாயை நம: ஹோம் இஷ்டதாயை நம: ஹோம் மரீச்யை நம: ஹோம் ச்வாலின்னியை நம: என்று உச்சரித்துக்கொண்டு ஊர்த்தவம், கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு என்னும் திக்குக்களிலுள்ள முகங்களில் முஷ்டியுடன் கூடின கட்டைவிரலின் முத்திரையால் நியாசஞ் செய்ய வேண்டும்.

ஹேம் சாந்தியை நம:, ஹேம் வித்யாயை நம:, ஹேம் பிரதிஷ்டாயை நம:, ஹேம் நிவிர்த்தியை நம: என்று உச்சரித்துக்கொண்டு, கிழக்கு, தெற்கு, வடக்கு, மேற்கு முகங்களில் கட்டைவிரல் சுட்டுவிரல்களால் நியாசஞ் செய்யவேண்டும்.

ஹ§ம் தமாயை நம:, ஹ§ம் மோஹாயை நம:, ஹ§ம் க்ஷ§தாயை நம:, ஹ§ம் நிஷ்டாயை நம:, ஹ§ம் மிருத்தியவே நம:, ஹ§ம் மாயாயை நம:, ஹ§ம் பயாயை நம:, ஹ§ம் ஜராயை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் நடுவிரல்களால் இருதயம், கழுத்து, இரண்டு தோள்வளைகள், தொப்புள், வயிறு, பிருஷ்டம், இரண்டு மார்புகள் என்னுமிவற்றில் நியாசஞ் செய்ய வேண்டும்.

ஹிம் ராஜாயை நம:, ஹிம் ரக்ஷ£யை நம:, ஹிம் ரத்தியை நம:, ஹிம் பாலியை நம:, ஹிம் காமாயை நம:, ஹிம் சம்யமாயை நம:, ஹிம் கிரியாயை நம:, ஹிம் புத்யை நம:, ஹிம் காரியை நம:, ஹிம் தாத்ரியை நம:, ஹிம் பிராம்மண்யை நம:, ஹிம் மோஹின்னியை நம:, ஹிம் மனோன்மன்னியை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் அணிவிரல்களால் மூலாதாரம், குஹ்யம், பீஜம், இரண்டு துடைகள், இரண்டு முழங்கால்கள், இடுப்புக்கு மேல்பக்கம் இரண்டு, இடுப்பு இரண்டு, இடது வலது பக்கம் இரண்டு என்னுமிவைகளில் நியாசஞ் செய்யவேண்டும்.

See Also  Sri Guru Charan Sharan Ashtakam In Tamil

ஹம் சித்தியை நம:, ஹம் ருத்தியை நம:, ஹம் தூத்தியை நம:, ஹம் லக்ஷிமியை நம:, ஹம் மேதாயை நம:, ஹம் காந்தியை நம:, ஹம் ஸ்வதாயை நம:, ஹம் த்ருத்யை நம: என்று சொல்லிக்கொண்டு கட்டைவிரல் சுண்டுவிரல்களால் இரண்டு கால்கள், இரண்டு கைகள், மூக்கு, சிரசு, இரண்டு புஜங்கள் என்னுமிவைகளில் நியாசஞ் செய்யவேண்டும்.

நம: சுவாகா முதலிய ஆறுவகைகளுடன் கூடின அங்கநியாசத்தை செய்ய வேண்டும். எவனுக்கு அவகாசமிருக்கின்றதோ புத்திக்குக் கலக்கமும் ஏற்படவில்லையோ அவன் ஸ்ரீகண்ட முதலிய நியாசங்களையும், ஆறு அத்துவாக்களின் நியாசங்களையும் செய்ய வேண்டும்.

இவ்வாறு ஆன்மசுத்தி தேகசுத்திகளை முன்னிட்டு நியாசஞ் செய்யப்பெற்ற மந்திரமயமான சரீரத்தையுடைய தனது சரீரத்தால் சிவரூபத்தையடையந்தவனாய் சிவனை அர்ச்சிப்பதற்கு யோக்கியனாகவாகிறான். தான் சிவனாகாமல் சிவனையருச்- சிக்கக்கூடாதென்று பெரியோர்கள் கூறுவதால் சிவசாமியத்தையடைவதற்காக மேலே கூறியவாறு யாவற்றையுஞ் செய்யவேண்டும்.

இவ்வாறு ஆன்மசுத்தி தேகசுத்திகளைச் செய்வதற்கு சத்தியில்லையாயின் நியாசமாத்திரமாவது செய்யவேண்டும். எல்லா நியாசங்களையும் செய்யமுடியாவிடினும், தண்டநியாசம் சடங்கநியாசங்களை செய்யவேண்டும். அவற்றினாலேயே தேகத்திற்கும் ஆன்மாவிற்கும் சுத்தி ஏற்படுதலாலும் அதனால் சிவரூபம் ஏற்படுதலாலும் சிவனையருச்சிப்பதற்கு உரியவனாகவாகின்றான். இவ்வாறு அங்கநியாசஞ்செய்தபின் அந்தரியாகஞ் செய்ய வேண்டும்.