॥ சிவார்ச்சனா சந்திரிகை – விபூதியின் வகை ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை:
விபூதியின் வகை
கற்பம், அனுகற்பம், உபகற்பம், அகற்பம் என விபூதி நான்கு வகைப்படும். அவற்றுள், நோயில்லாததாயும், கன்றுடன் கூடியதாயுமுள்ள பசுவைப் பூசித்து, அந்தப் பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது ஆகாயத்திலிருக்கும் பொழுதே யெடுத் பிண்டமாகச் செய்து உலர்த்திப் பஞ்சப்பிரமமந்திரங்களால் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப் பெற்ற விபூதியு அக்கினிஹோத்திரத்திலுண்டான விபூதியுமாகிய இந்த இரண்டும் கற்பமெனப்படும்.
வனத்தில் உள்ள உலர்ந்த சாணத்தை யெடுத்துச் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து எடுத்து மூலமந்திரத்தால் சுத்திசெய்யப்பெற்ற விபூதி அனுகற்பமெனப்படும்.
வனத்திலுள்ள வீட்டிலாவது பசுக்கட்டுமிடத்திலாவது செங்கற்சூளையிலாவது உள்ள காட்டுத் தீ முதலியவற்றால் தகனஞ் செய்யப்பட்ட விபூதியையெடுத்து வஸ்திரத்தால் சுத்தி செய்து கோசலத்தால் பிண்டஞ்செய்து மீண்டும் சிவாக்கினியில் வைத்துத் தகனஞ் செய்து மூலமந்திரத்தால் சுத்தி செய்யப்பெற்ற விபூதி உபகற்பமெனப்படும்.
மந்திரம் முதலியவையின்றிப் பிராமணராலாவது, பெண்கள் சூத்திரர் முதலியவர்களாலாவது, சுத்தமானவிடத்திலுள்ள கோமயத்தை எடுத்துச் சேகரிக்கப்படடதும், வேதாத்தியயனத்துடன் அக்கினி காரியஞ் செய்கிறவர்களுடைய வீட்டிலுள்ள அடுப்பு முதலியவற்றினின்று எடுக்கப்பட்டதும் அகற்பமெனப்படும்.
இவற்றுள் அகற்பமான விபூதியாயின் அதனை எடுத்து அஸ்திர மந்திரத்தால் திக்குபந்தனஞ் செய்து ஹோம் ஈசான மூர்த்தாய நம:, ஹேம் தத்புருஷவக்திராய நம:, ஹ§ம் அகோரஹிருதயாய நம:, ஹிம் வாமதேவகுஹ்யாய நம:, ஹம் சத்தியோசாத மூர்த்தயே நம:, ஹாம் ஹிருதயாய நம:, ஹீம் சிரஸே நம:, ஹ¨ம் சிகாயை நம:, ஹைம் கவசாய நம:, ஹெளம் நேத்திராய நம:, ஹ: அஸ்திராய நம:, ஹ்லாம் நிவிருத்திகலாயை நம:, ஹ்வீம் பிரதிஷ்டா கலாயை நம:, ஹ்ரூம் வித்தியாகலாயை நம:, ஹ்யைம் சாந்திகலாயை நம:, ஹெளம் சாந்தியதீத கலாயயை நம: என்று பஞ்சப்பிரம்மஷடங்க மந்திரங்களாலும், கலாமந்திரங்களாலும் சுத்தி செய்யவேண்டும்.
விபூதிதரிக்கும் முறை உத்தூளனம் திரிபுண்டாமென இரண்டு வகைப்படும்.
உத்தூளனமும், அழுக்கு நிவிர்த்திக்குரிய ஸ்னான ரூபம் விதிஸ்னான ரூபமென இரண்டு வகைப்படும். நீரால் ஸ்னானஞ் செய்தவர்களுக்கு இந்த இருவித விபூதிஸ்னானங்களிலும் அதிகாரமுண்டு.