॥ சிவார்ச்சனா சந்திரிகை – விதிஸ்நாநம ॥
ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளியசிவார்ச்சனா சந்திரிகை
விதிஸ்நாநம்
பின்னர் விதி ஸ்நாநத்திற்காக விந்துத் தானத்திலிருந்து கங்கை முதலிய தீர்த்தங்களுள் யாதானுமோர் தீர்த்தத்தை அங்குசமுத்திரையினால் வெளஷட் என்னும் பதத்தை இறுதியிலுடைய இருதய மந்திரத்தை உச்சரித்து இழுத்து, உத்பவ முத்திரையால் நமோந்தமான இருதய மந்திரத்தை உச்சரித்து முன்னர் ஸ்தாபித்து, அந்தத் தீர்த்தத்தால் நதி தடாகம் முதலியவற்றை நிறைந்திருப்பதாகப் பாவிக்கவேண்டும்.
பின்னர் விதிஸ்நாநத்திற்காக வைக்கப்பட்ட மூன்றாவது பாகமாகிய மண்ணை எடுத்து நாபியளவுள்ள நீரிலிறங்கி நதியாயின் பிரவாகத்திற்கு எதிர் முகமாகவும், தடாகம் முதலியவற்றில் கிழக்கு அல்லது வடக்கு முகமாகவும் நின்று கொண்டு மீன், தவளை முதலியன வசித்தாலுண்டாம குற்ற நிவிர்த்தியின்பொருட்டுக் கையளவில் சதுரச்சிரமாகச் சிவ தீர்த்தத்தைத் தனக்கு முன்பாகக் கற்பிக்க வேண்டும்.