Sivarchana Chandrikai – Panchaakkara Jeba Murai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பஞ்சாக்கர செபமுறை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பஞ்சாக்கர செபமுறை

பஞ்சாக்கரத்தைக் குருவின் உபதேசத்தை யநுசரித்து மிகவும் சாவதானத்துடன் போற்றிக் கொள்ளல் வேண்டும். சிவாசன பத்மத்திற்குத் தெற்குத் தளத்தில் அகோரமூர்த்திக்குத் தெற்குப் பக்கத்தில் உரக்கினதங்கத்தின் காந்திபோல் காந்தியையுடையவளாயும், பருத்தும் நிமிர்ந்து மிருக்கின்ற தனங்களையுடையவளாயும், நான்கு கைகளையும் மூன்று கண்களையும் சிரசில் இளம் பிறையையும் உடையவளாயும், தாமரை புஷ்பத்தையும் நீலோற்பல புஷ்பத்தையும் தரிப்பவளாயும், பிரசன்னதை யுடையவளாயும், வரம் அபயங்ளோடு கூடிய கைகளையுடையவளாயும், எல்லா இலக்கணங்களுமுடையவளாயும், எல்லா ஆபரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டவளாயும், வெண்டாமரை யாசனத்தில் வீற்றிருப்பவளாயும், கருமை நிறத்தையும் நௌ¤தலையுமுடைய கூந்தல்களை யுடையவளாயும் இருக்கும் ஸ்ரீமத் பஞ்சாக்கரதேவியை மனத்தால் ஆவாகனம் முதலியவற்றாலும், சந்தன புஷ்பங்களாலும், தூபதீபங்களாலும், நைவேத்தியத்தாலும் பூசிக்க வேண்டும். பின்னர், சுகாசனத்திலிருந்து கொண்டு நேத்திர ர¬க்ஷசெய்து வடக்கு முகமாக இருந்து மூக்கின் நுனியில் கண்களை வைத்துக்கொண்டும், மௌனமாயும் இருந்து, ஆத்மர¬க்ஷ செய்து கொள்ளல் வேண்டும். பின்னர் எல்லாத் திக்குக்களையும், பெருகுகின்ற அமிருதக் கூட்டத்தால் நனைக்கப்பட்டவையாயும், மேலும் கீழும் சந்திரமண்டலத்துடன் கூடினவையாயும் தியானிக்க வேண்டும். தன்னுடைய தேகத்தைச் சந்திரனாகிய சம்புடத்தின் மத்தியிலிருக்கிறதாயும், அமிருததாரைகளால் நனைக்கப்பட்டதாயும், சத்திமண்டலத்தினின்றும் பெருகுகின்ற அமிருததாரைகளால் அமிருதரூபமானதாயும் பாவிக்க வேண்டும். இது ஆத்மர¬க்ஷயாகும். இதனைத் தேவர்காளாலும் பேதிக்க முடியாது. அவ்வாறு ஆத்மர¬க்ஷ செய்த பின்னர் மந்திரர¬க்ஷ செய்ய வேண்டும்.

மந்திரர¬க்ஷ செய்யும் முறைவருமாறு:- வயிற்றிலிருந்து வாயுவை அஸ்திரமந்திரத்தை யுச்சரித்துக்கொண்டு வலது நாடி வழியாக ரேசகஞ் செய்து, வெளியிலிருக்கும் நல்ல வாயுவால் இடது நாடி வழியாக வயிற்றை நிரப்ப வேண்டும். அபான வாயுவை மேலேயிழுத்து பிராணாபான வாயுக்களை யடக்கிக் கும்பகத்தால் ஒரேமனதுடன் சுழுமுனா நாடியில் வாயுவைச் சேர்க்க வேண்டும். இருதயத்தில் சுழுமுனையின் மத்தியிலிருக்கிறதாயும், சிவனுடன் சிவனுடன் கூடினதாயும், மந்திர மாதாவாயுமிருக்கிற சிற்சத்தியினிடத்தில் மந்திரத்தைச் சேர்க்க வேண்டும். மணிபோலும் மந்திரங்களையும் பிரபைபோலும் மந்திரதேவதையையும் போக்குவரத்துக்களால் தியானித்துக்கொண்டு மந்திர அக்கரங்களைச் செபிக்க வேண்டும். அந்த மந்திர தேவதையினிடத்துப் பற்றுவைத்திருக்கின்ற சித்தத்தையுடையவனாய், பொருள் சொல் என்னுமிவற்றின் சம்பந்தத்துடன் செபிக்க வேண்டும். இதுதான் மந்திர ர¬க்ஷ எனப்படும். இந்தர¬க்ஷ தேவர்களாலும் செய்யப்பட்டதாக ஆகும். இவ்வாறு அறிந்து முயற்சியுடன் செபத்தை நன்றாய்ச் செய்ய வேண்டும்.

செபிக்கும் முறையாவது:- நாபி முதல் துவாத சாந்தம் வரை சந்திரன் சூரியன் அக்கினி ஆகிய இவர்கள் ரூபமாக இருப்பவளாயும், ஆனந்த ரூபியாயும், சுழுமுனா நாடியில் உள்ளிருப்பவளாயுமுள்ள பராசக்தியை ஆதாரசக்கரம் முதல் வாயுவினால் பிரகாசிக்கச் செய்து, இருதயம் கண்டம் தாலு புருவநடு பிரமரந்திரம் ஆகிய தானங்களில், பிரமன் விட்டுணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவன் என்னுமிவர்களை முறையே தியானித்து நீக்கிக்கொண்டு, மின்னற்கொடிக்குச் சமானமாயும், அஸ்திரமந்திரத்தின் அம்சமாயுமிருக்கிற மந்திரத்தை நாதத்தை முடிவாக உடையதாயிருக்கும்படி உச்சரித்துக் கொண்டு, மீண்டும் மூலாதாரத்திலிருக்கும் அந்த மந்திரத்தைப் போக்குவரத்துடன் நூற்றெட்டு முறை செபிக்க வேண்டும்.

அல்லது இருபத்தெட்டு, அல்லது எட்டு முறையாவது குருவால் உபதேசிக்கப்பட்டவாறு செபிக்க வேண்டும். இவ்வாறு செபிப்பவன் சிவசாயுச்சியத்தை யடைவன்.

செபமானது உள்ளிருக்கும் அகாரம் முதற்கொண்டு க்ஷகாரம் முடிவாகவுள்ள அக்கரமாலையினாலாவது, வெளியிலிருக்கும் உரத்திராக்க மாலையினாலாவது செய்யப்படல் வேண்டும்.

அகாரமுதல் க்ஷகாரம் முடிவாகவுள்ள அக்கரமாலையினாற் செய்யப்படும் செபமுறை வருமாறு:- பிரமரந்திரத்தில் வெண்மையான எட்டுத் தளங்களுடன் கூடினதாயும், நான்கு முக்கு யந்திர வடிவாயும், மேற்பாகத்தைப் பற்றுக் கோடாக உடையதாயும் இருக்கிற தாமரைப் புஷ்பத்தைத் தியானிக்க வேண்டும். ஆகாய பீசாக்கரம் அதன் கர்ணிகையாகவும், பதினான்கு உயிரெழுத்துக்களும் விசர்க்கமும் விரையாகவும், நெடில் குறில் என்று எண்ணப்பட்டுவருகின்ற பதினாறு உயிரெழுத்துக்களும் கேசரங்களாகவும், கவர்க்கம் முதல் பவர்க்கம் வரை ஐந்து வர்க்கங்களிலுள்ள இருபத்தைந்து அக்கரங்களும் தளங்களாகவும், அமிருத பீசாக்கரம் நான்கு முக்கு யந்திரத்தின் திக்குக்களாகவும், ஏழாவது அக்கரம் உபதிக்குக்களாகவும், இவ்வாறு அக்கர ரூபமாகத் தாமரையைச் சிந்திக்க வேண்டும். சிந்தித்த மாத்திரத்தினாலேயே எல்லா நோய்களும் அபமிருத்துக்களும் நீங்கும்.

பின்னர் இடைகலை பிங்கலைகளின் வழியாக வெளியே செல்லாத வாயுவினால் மூலாதாரத்திலிருக்கும் அக்கினியை சிகையுடன் விருத்தி செய்து, அந்த அக்கினி சிகை, குண்டலினி சத்தியுடன் சுழுமுனா நாடி வழியாகப் பிரமரந்திரம் வரை சென்று, அங்கிருக்கும் அக்கர ரூபமான தாமரையோடு சம்பந்தித்து, அந்தத் தாமரையினின்றும் பெருகின க்ஷகார முதல் அகாரமீறான அக்கர வரிசை ரூபமாகவுள்ள அமிருத தாரைகளைப் பிரமரந்திரம் முதல் மூலாதாரம் வரை வியாபித்துக்கொண்டிருப்பதாகப் பாவிக்க வேண்டும்.

மூலாதாரத்திலிருக்கும் அக்கினிக்குச் சமமாகப் பிரகாசிக்கும் சுழுமுனா நாடியின் வழியாகப் பிரமரந்திரம் வரை சென்ற குண்டலினி சத்தியையே, அக்கர ரூபமான தாமரையினின்றும் பெருகின அமிருத தாரையுடன் சமரசத்தை யடைந்து அமிருதம் போலிருக்கிறதாயும், பரமானந்த ரூபமாயுமுள்ள அக்கர சத்தியாகத் தியானிக்க வேண்டும். இவ்வாறே முதலாவது செல்லுங்காலத்தில் பிரகாச ரூபமாயும், எதிர்த்து வருங்காலத்து அமிருதம் போலிருக்கிறதாயும், நடுவில் ஆனந்தசிற்கனமாயும் அறிகிறோம் என்று பெரியோரும் கூறுகின்றனர்.

பிரமரந்திரத்திலிருக்கும் அக்கரரூபமான தாமரை முதல் அகாரம் முதலிய முறையாக மூலாதாரம் வரை வியாபித்துக் கொண்டிருக்கிற அக்கர ரூபமான சத்தியில் அகாரம் முதற்கொண்டு எட்டு அக்கரங்களால் ஒரு வருக்கமும், ளகாரம் முதல் எட்டு அக்கரங்களால் ஒரு வருக்கமும், ககாரம் முதல் ஐந்து ஐந்து வருக்கங்ககளால் ஏழுவருக்கங்களும், ஆக ஒன்பது வருக்கங்களும், முறையே சூரியன் சந்திரன், புதன், குரு சுக்கிரன், செவ்வாய், சனி, இராகு,கேதுக்களின் இரத்தின ரூபங்களாக இருக்கின்றன.

அவர்களின் இரத்தினங்களாவன – மாணிக்கம் வைடூரியம் புஷ்பராகம் வைரம் பவளம் நல்முத்து இந்திரநீலம் கோமேதகம் மரகதம் என்னும் இவை. இவற்றால் செய்யப்பட்ட அக்கமாலை மேலானது. இது நவக்கிரகரூபமான எல்லா எழுத்துக்களாலும் பூரணமாயிருக்கின்றது. இந்த அக்கமாலையை இருதய கமலத்தின் நடுவில் நின்றும் வந்ததாகிய தீபாகாரமான பரமேசுவரனுடைய பிரபா ரூபமாகிய சத்தங்களுடன் பராசத்தியினின்றும் தோன்றினதாகப் பாவிக்க வேண்டும்.

மூல மந்திரத்தை நவரத்தின மயமான கற்பகக் கொடியின் நுனியிலிருக்கும் புஷ்பத்தினின்றும் தோன்றினதாகப் பாவித்து, க்ஷகாரத்தை மேருவாகச் செய்து, ளகாரம் முதலிய அக்கரங்களின் முறையாக அக்கமாலையில் மூலமந்திரத்தின் போக்குவரத்துக்களைப் பாவிக்க வேண்டும்.

மந்திரத்தை யுச்சரிக்குங் காலத்தில் மந்திரங்கள் மேல்நோக்கிச் செல்லுவதாகப் பாவிக்கும் முறையில் மந்திரத்தின் சிரசில் ளகாரம் முதலிய அக்கரங்களை விசர்க்கத்துடன் கூடியவையாக நியாசஞ்செய்து, மந்திரம் மீண்டும் வருவதாகப் பாவிக்குங்காலத்தில் அகாரம் முதலிய அக்கரங்களை விந்துவை இறுதியிலுடையவையாக நியாசஞ் செய்து செபிக்க வேண்டும். இவ்வாறு செய்யின் மந்திரம் நூறு முறை செபிக்கப்பட்டதாக ஆகும்.

See Also  Sri Chandikashtakam In Telugu

பின்னர், பதினாறு உயிரெழுத்துக்களை ஒன்றாகவும், ககரமுதல் மகரம் வரையுள்ள அக்கரங்கள் ஐந்தாகவும், யகர முதலிய நான்கு அக்கரங்கள் ஒன்றாகவும் யகர முதலிய நான்கு அக்கரங்கள் ஒன்றாகவும், ஆக எட்டு வருக்கங்களையும் மந்திரத்தின் சிரசில் நியாசஞ் செய்து எட்டு முறை மந்திரத்தைச் செபிக்க வேண்டும். இவ்வாறு செபிக்கும் பொழுது மந்திரம் நூற்றெட்டு முறை செபிக்கப்பட்டதாக ஆகும்.

செபத்தைத் தொடங்குங் காலத்தில் இரத்தினத்துடன் பிரபை சமரசமாயிருக்குமாறு போல, மூல மந்திரத்துடன் பரதேவதை சமரசமாயிருப்பதாகவும், மூலமந்திமாகிய நகார முதலிய அக்கரங்களை, பொன்மை கருமை புகைமை பொன்மை செம்மையாகிய வர்ணங்களையுடையவர்களாகவும், பரதேவதையின் வடிவத்துடன் சமரசமான வடிவத்தோடு இருப்பவர்களாகவும் உள்ள பிரமன் விட்டுணு உருத்திரன் மகேசுவரன் சதாசிவனென்னும் இவர்களாகவும் பாவிக்க வேண்டும்.

இருதயம் கண்டம் தாலு புருவநடு பிரமரந்திரமென்னுமிவற்றில் முறையே நகார முதலிய அக்கரங்களுடன் பிரமன் முதலாயினாரைத் தியானித்து நீக்க வேண்டும். இப்பொருள்களனைத்தும் முன்னர்க் கூறப்பட்ட சுலோகங்களில் சுருக்கமாகக் கூறப்பட்டிருக்கின்றன.

இவ்வாறு உள்ளேயிருக்கும் அக்கமாலையினால் செபிப்பதற்குச் சத்தியில்லாதவன் முன்னர்க் கூறிய முறையே செப ஆரம்ப காலத்தில் மந்திரத்தைப் பராசக்தியிலிருப்பதாகப் பாவித்து, மந்திரத்துடன் சேர்க்கப்பட்ட அகார முதலிய அக்கரங்களை விலக்கி, தனிமந்திரத்தை உருத்திராக்கம் முதலியவற்றால் செய்யப்பட்ட வெளியிலிருக்கும் அக்கமாலையினால் எண்ணிக்கொண்டு செபஞ் செய்ய வேண்டும்.

செபஞ் செய்யும் முறையாவது:- செபமாலைக்குரிய உருத்திராக்கம் நெல்லிக்கனி இலந்தைப்பழம் கடலையென்னுமிவற்றின் அளவினையுடையதாய், முறையே உத்தமம் மத்திமம் அதமமெனப்படும். முகமற்றதும் மூன்று நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து பதினொன்று ஒன்று என்னும் முகத்தையுடையனவுமான மணிகள் செபமாலைக்கு ஆகும். ஏனைய முகமணிகள் செபமாலைக்காகா. செபமாலையை நூற்றெட்டு மணி அல்லது ஐம்பத்துநான்கு மணி அல்லது இருபத்தேழு மணிகளால் சுவர்ணக் கொடியிலேனும், வெள்ளிக்கொடியிலேனும், வெண்பட்டு இழையினாலாகிய கயிற்றிலேனும், முகத்தோடு முகமும் அடியோடு அடியும் பொருந்த மேருவுடன் கூடினதாய்க் கோக்கப்படல் வேண்டும். அந்தந்த வருணங்களுக்குரிய உருத்திராக்கங்களால் செய்யப்பட்டதாயும், சத்தியோசாத முதலிய மந்திரங்களைத் தனித்தனி நூறு முறை செபித்துக் கழுவுதல், குச்சிப்புல்லால் அழுக்கை நீக்குதல், தூபங்காட்டல், சந்தனம் பூசுதல், மந்திரஞ் செபித்தல் என்னும் ஐந்து சமஸ்காரங்களையுஞ் செய்து ஈசானம் அல்லது அகோர மந்திரத்தால் செபிக்கப்பட்ட மேருவையுடையதாயும், சிவபூசை செய்யும் முறைப்படி ஆவாகன முதலிவற்றால் பூசிக்கப்பட்டதாயும், ஜபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுதே ஹும்பட்என்னும் பதத்தை இறுதியிலுடைய அஸ்திர மந்திரத்தால் புரோக்ஷிக்கப்பட்டதாயும், இருதய மந்திரத்தை உச்சரித்து சந்தனம் புஷ்பம் மாலாமுத்திரையென்னும் இவற்றாற் பூசிக்கப்பட்டதாயும் உள்ள அக்கமாலையை, வலது கையில் ஆடையால் மறைத்து, வாசிக செபத்தில் நடு விரலில் வைத்துக்கொண்டு சுட்டு விரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். மௌ¢ளச் செபிப்பதான உபாம்சு என்னும் செபத்தில் அணிவிரல் வைத்துக்கொண்டு நடுவிரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். மானசமென்னும் செபத்தில் கடைவிரலில் வைத்துக்கொண்டு அணிவிரல் கட்டைவிரல்களால் தள்ளல்வேண்டும். போகத்தில் இச்சையுள்ளவன் கீழ்நோக்கியும், மோக்ஷத்தில் இச்சையுள்ளவன் மேல் நோக்கியும் தள்ளல் வேண்டும். செபிக்குங் காலத்து மேருவைத் தாண்டக் கூடாது. மேரு மணி கைப்பட்டவுடன் திரும்ப மறுத்துவாங்கி மேலே கூறியவாறு கையில் ஏறிட்டுச் செபிக்கவேண்டம். மேருவைத் தாண்டினால் அந்தக் குற்றம் நீங்குதற்பொருட்டு அகோர மந்திரத்தை ஆயிரம் முறை செபிக்க வேண்டும். அந்தக் குற்றம் உண்டாகாதவாறு மேரு மணியைப் பெரிதாயிருக்கும்படி செய்துகொள்ளல் வேண்டும். அக்கமாலை சோர்வினால் காலில் விழுந்தால் அகோர மந்திரத்தை ஆயிர முறையும், பூமியில் விழுந்தால் அந்த மந்திரத்தை முப்பது முறையும், ஆடையில் விழுந்தால் அந்த மந்திரத்தை நூறு முறையும் செபிக்க வேண்டும். செபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுது வலதுகைக் கடைவிரல்களில் நடுவில் ஒரு புஷ்பத்தை வைத்துக் கொண்டு செபித்தல் வேண்டும்.

உருத்திராக்கமாலையை வைத்துக்கொண்டு செபம் செய்யும் பொழுது அந்த மாலையைச் சிரமமின்றித் தாங்துற் பொருட்டு வல கையில் வைக்கப்பட்டிருக்கும் புஷ்பத்தை இடது கையில் வைத்துக் கொண்டு செபஞ் செய்ய வேண்டும். மிக மந்தமாகவும் மிக வேகவமாகவும் செபஞ் செய்தல் கூடாது. மிகவும் சாவதானத்துடன் செபத்தைப் பூர்த்தி செய்து, இடது கையில் அஸ்திரம் கவசம் இருதயமென்னும் மந்திரங்களை ஒன்றன்பின் ஒன்றாக நியாசஞ் செய்து, அதன் பின்னர்ச் செபத்தை ஆரம்பஞ் செய்யும் பொழுது தரிக்கப்பட்ட புஷ்பத்தை வைத்து, மீண்டும் இருதயம் கவசம் அஸ்திர மந்திரங்களால் சம்புடமாகச் செய்து, அஸ்திரமந்திரத்தால் சம்ரக்ஷணமும், கவசமந்திரத்தால் அவகுண்டனமும் செய்து, வலது கையில் மீண்டும் அந்தப் புஷ்பத்தை எடுத்து வைத்துக் கொண்டு, இருதயத்தில் வைத்து, பூரணசந்திரனுக்குச் சமமான செபம் அந்தப் புஷ்பத்துள் இருப்பதாகத் தியானம் செய்து பூமியில் வலது முழங்காலை ஊன்றிக்கொண்டு.

ஹாம், குஹ்யாதிகுஹ்யகோப்தா த்வம் கிருஹாணா ஸ்மத்க்ருதம் ஜபம்II ஸித்திர்பவது மே யேந த்வத்ப்ரசாதாத் த்வயி ஸ்திதேII

ஹாம், ஹெளம் சிவாய ஸ்வாகா, ஸ்ரீ பரமசிவஜபம் த்வயி நிக்ஷிபாமி என்று சொல்லிக்கொண்டு செபத்தைச் சுளுகத்திலிருக்கும் அருக்கிய சலத்தால் அக்ஷதை தருப்பை புஷ்பமென்னுமிவற்றுடன் சிவனுடைய வரத ஹஸ்தத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

தன்னாற்செய்யப்பட்ட புத்தி முத்திகளைத் தாக்கூடிய செபம் தன்£ல் இவ்வளவு செய்யப்பட்டது என்பதுபோன்ற வியந்து சொல்லும் சொற்களாலும், ஜலங்கழித்தலாலும், கன்மம் செய்யாமையாலும், செபகருமத்திற்குக் கேடு ஏற்படுமோவென்னும் சந்தேகம் நிகழுமாதலால், செபத்தை இரக்ஷிப்பதின் பொருட்டு, செபத்தைச் சிவபெருமானுடைய திருக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலே கூறப்பட்ட குஹ்யாதி என்றற்றொடக்கத்துச் சுலோகத்தின் பொருள் வருமாறு:- குஹ்யம் அதிகுஹ்ய முதலிய மந்தித் தத்துவங்களனைததையும் காப்பவர் நீரே; ஆகையால் தேவரீர் அனைத்தையும் காக்கின்றமைபற்றி என்னுடைய செபத்தையும் ஏற்றருளல் வேண்டும். எந்தச் செபமானது உம்மிடத்தில் இருக்கின்றதோ அந்தச் செபத்தைக் கொண்டு உம்முடைய பிரசாதத்தால் எங்களுக்குப் போகமோக்ஷங்கள் சித்திக்கவே செய்யும். ஆகையால் அடியேனிடத்திற் கிருபைவைத்துச் செபத்தை ஏற்றருளல் வேண்டுமென்பதாம்.

பின்னர் ஹாம் யத்கிஞ்சித் கர்மஹே தேவஸ§கிருதம் சைவது துஷ்கிருதம்I தன்மே சிவபதஸ்தஸ்ய புங்க்ஷ¢வ க்ஷபய சங்கரII ஹாம், ஹெளம், சிவாய ஸ்வாஹா, பரமசிவாயமே சுகிருதம் துஷ்கிருதஞ்ச நிவேதயாமி என்று சொல்லிக்கொண்டு, புண்ணிய பாவரூபமான எல்லாக் கன்மங்களையும் முன்னர்க் கூறிவாறு சுளுகத்திலிருக்கும் நீரினால் சமர்ப்பிக்க வேண்டும்.

See Also  108 Names Of Navagrahanam Samuchchay – Ashtottara Shatanamavali In Tamil

இந்தச் சுலோகத்தின் பொருள் – ஹே சங்கரனே! சிவபதத்திலிருக்கும் என்னுடைய புண்ணியரூபமான கன்மத்தைக் காப்பாற்றும்; பாவரூபமான கன்மத்தை நாசஞ்செய்யு மென்பதாம்.

மோக்ஷத்தை யடையவொட்டாது செய்யும் விக்கினத்தை நீக்குதற் பொருட்டும், போகத்தையடைவதின் பொருட்டும், புண்ணியத்தைச் சிவனுடைய திருக்கரத்தில் சமர்ப்பிக்க வேண்டம். பாவத்தைச் சமர்ப்பித்தல் எதன் பொருட்டென்னில், அது நாசமடைதற் பொருட்டென்க. ஆகையால் சுலோகத்தில் காப்பாற்றும் நாசஞ்செய்யுமென்பதற்கு புண்ணித்தைக் காப்பாற்றும், பாவத்தை நீக்கும் என்று பொருள் செய்து கொள்ளல் வேண்டும்.

போகத்தில் ஆசையற்ற முமூக்ஷ§வானவன் மோக்ஷத்திற்குள்ள விக்கினங்கள் நாசமடைதற் பொருட்டுள்ள புண்ணியத்தை மாத்திரம் காப்பாற்றுமென்று பிரார்த்தித்துக் கொள்ளல் வேண்டும். போகத்தின் பொருட்டுள்ள புண்ணியங்கள் இடையில் வந்தனவாயும் மனுடபோகம் முதற்கொண்டு இரணியகருப்பருடைய ஆனந்த மீறாக உள்ள போகங்களைத் தரக்கூடியனவாயும் உள்ளன. இவை சிவபூசையில் அங்கபலனாயிருத்தல் பற்றி, (அஃதாவது பிரதான பலனாக இல்லாமையால்) விடயங்களில் வெறுப்படைந்த கேவல முமூக்ஷ§வைக் குறித்து “பரமாத்மாவை நோக்க இந்தப் போகங்கள் நரகத்திற்கொப்பாகும்” என்று கூறும் புராண வசனப்படி, போகத்தைத் தரும் புண்ணியங்கள் நரகத்தைத் தருவனவாய் இருந்துகொண்டு பாபரூபமாயிருத்தலால், அந்தப் பாவம் நசிக்கும் பொருட்டே ஈசுவரனிடத்தில் புண்ணியத்தை மாத்திரம் காப்பாற்றுமென்னும் இந்தப் பிரார்த்தனை முமூக்ஷ§க்கு ஏற்பட்டுள்ளது. காப்பது என்னும் பொருளைத்தரக்கூடிய புஜிதாதுவானது, கிரியையின் பலனைப் பிறன் அடைதலென்னும் பொருளைத் தரக்கூடிய பரஸ்மைபதமாயிருத்தலால், அனுபவியும் என்னும் பொருளைத்தரக்கூடிய புங்க்தியென்று பரஸ்மைபதத்திற்குரிய பிரத்தியயங்களுடன் இருக்க வேண்டும். ஆயினும் மந்திர ரூபமான இந்தச் சுலோகத்தில் வைதிகமந்திரங்களில் கிரியையின் பலனை, தான் அடைதலென்னும் பொருளைத்தரக்கூடிய ஆத்மநே பதமான “ரக்ஷஸ்வ” என்னும் பிரயோகம் இலௌகிக விருத்தமாயிருப்பினும், வ்யத்யயோபகுலமென்ற சூத்திரத்தை அனுசரித்து சந்தஸில் ஆத்மனேபதமாக வருமாறுபோல இவ்விடத்தில் வேதத்திற்குச் சமானமான மந்திர சுலோகத்திற்கு ஒருவித குற்றமுமில்லாமை காண்க.

அல்லது புஜிதா துவையுடைய புங்க்க்ஷ¢வ என்னும் பதத்திற்கு இரக்ஷிக்கவேண்டும் என்னும் பொருள் கொள்ளாமல் அநுபவியும் என்னும் பொருளையே கொள்ளல் வேண்டும். இவ்வாறு கொண்டால் ஆத்மனேபதமாக ஆகும்.

புண்ணியம் என்னுஞ் சொல்லால், தனித்த முத்தியை விரும்பும் பூசகனுடைய போகத்தின் பொருட்டுள்ள விருப்பமில்லாத புண்ணியத்தையே கொள்ளல்வேண்டும். முத்தியின் பொருட்டுள்ள புண்ணியத்தைக் கொள்ளக்கூடாது.

அரசனுக்கு அரசபோகம் சுவாதீனமாயிருக்குமாறு போல முமூக்ஷ§க்களால் சமர்ப்பிக்கப்பட்ட போகமானது பரமசிவனுக்குச் சுவாதீனமாயிருக்கின்றது. இவ்வாறன்றிப் பரமசிவனே யனுபவிக்கிறான் என்பது கருத்தன்று. சுவாதீனமாவது, பூசகனிடத்தில் அன்புள்ள சுற்றத்தார்கள் அல்லது நண்பர்கள் ஆகிய இவர்களிடத்துப் போகத்தைச் சேர்த்தலாம். முமூக்ஷ§வால் விரும்பப்படாத புண்ணியத்தைச் சிவன் அந்த முமூக்ஷ§வினுடைய சுற்றத்தார் நண்பரென்னும் இவர்களின் பொருட்டுக் கொடுக்கிறாரென்பது சுருதியில் பிரசித்தமாயிருக்கின்றது. முமூக்ஷ§வினுடைய பாவங்களை அவனுடைய சத்துருக்களுக்குக் கொடுக்கிறாரென்பதும் பிரசித்தமாயிருக்கின்றது. ஆயினும் அட்டமூர்த்தியான சிவனுடைய எல்லா ரூபத்தையும் பூசகன் தியானித்துக்கொண்டிருக்கின்றான். ஒன்றையும் பகைக்கவில்லை. ஆகையால் தன்னாற் செய்யப்பட்ட பாவங்கள் தன்னிடத்தில் பலனையுண்டுபண்ணாது நசிக்க வேண்ட மென்பதையே பிராத்திப்பது பொருத்தமென்றெண்ணி அந்தப் பிரார்த்தனை மந்திரத்திற் சேர்க்கப்பட்டது.

பின்னர், சிவோ தாதா சிவோ போக்தா சிவஸ்ஸர்வமிதம் ஜகத், சிவோ யஜதி சர்வத்ர யச்சிவஸ்ஸோஹமேவது.

ஹாம், ஹெளம், சிவாய சுவாகா பரமசிவமா த்மானம் துப்யம் நிவேதயாமி யென்று சொல்லிக்கொண்டு, முனர்க்கூறியவாறு சுளுகோதகத்தினால தன்னைச் சமர்ப்பிக்க வேண்டும். $$இந்த மந்திரசுலோகத்தில் ஸோஹம் என்னும் ஓர் பாகத்தால் தனக்கும் சிவனுக்குமுள்ள சரீரசரீரிபாவம் நிச்சயம் செய்யப்படுகின்றது. சிவன் எல்லாவற்றையும் நியமனஞ் செய்கின்றமையால் சரீரி. பூசகன் சிவனால் நியமிக்கப்படுபவனாயிருக்கின்றமையால் சரீரம். அகவே சரீரசரீரி பாவத்தில் ஸோஹம் என்பது ஓரிடத்திலிருப்பதாக வந்திருக்கின்றது. எதுபோலுமெனின் தர்மக்ஞஸ் ஸ§ந்தரோ ராஜா என்னுமிடத்தில், தர்மத்திற்குக் குணத்தன்மையும், சுந்தரனான அரசனுக்குக் குணித் தன்மையும் ஏற்பட்டு முதல் வேற்றுமைவந்து ஓரிடத்திருத்தலென்னும் சாமானாதி கரண்யம் சம்பவிக்குமாறு போலுமென்க. ஸோஹமேவது என்பதிலுள்ள ஏவ என்பது ##அயோகவியவச்சேதமாகும்.

($$ இந்த மந்திர சுலோகத்தின் பொருள்:- பலன் தருபவன் சிவனே பலனையனுபவிப்பவன் சிவனே. எல்லாச் செகத்துக்களும் சிவனே. பூசிப்பவன் சிவனே. இவ்வாறு சிவன் எல்லாமாயிருத்தலால் நான் சிவமாயிருக்கின்றேனென்பதாம். இன்னும் விரிவாக இதன் பொருள் நூலாசிரியரால் பின்னர்க் கூறப்படுகின்றது. ## அயோகவியவச்சேத மென்னும் வடமொழியானது, தமிழில் இயையின்மை நிக்குதலென்று மொழிபெயர்த்து வழங்கப்படும். சங்கம் வெளுப்புத்தான் என்றவிடத்து, தான் என்னும் ஏவகாரம் சங்கத்திற்கு வெளுப்பு இயல்பு என்பதைக்காட்டுமாறுபோல, சிவன் நான்தான் என்னுமிடத்து, தான் என்னும் ஏவகாரம் சிவன் நானாயிருப்பது இயல்பு என்பதைக் காட்டும்.)

இவ்விடத்தில் சிவ என்னும் சொல்லால் ஆணவம் மாயை கன்மமென்னும் மூன்று மலங்களோடும் சம்பந்தப்படாதவராயும், மேலான மங்கலத்தை யுண்டுபண்ணுகிறவராயும் இருக்கும் பரமசிவன் குறிக்கப்படுகின்றார் “அநாதியான மலசம்பந்தம் இவரிடத்தில் இயல்பாகவே யில்லாமையால் சிவசப்தத்தின் உண்மையான பொருளையறிந்த பெரியோர்களால் இவர் சிவனெனக் கூறப்படுகிறார்” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் பிரசித்தராயிருக்கிற பரமசிவன் குறிக்கப்படுகிறார் என அறிந்து கொள்க.

அல்லது, நித்திரையென்னும் பொருளையுணர்த்தும் சீங் என்னுந்தாதுவுடன் உணாதியானவன் பிரத்யயத்தை இறுதியிலுடைய தாய்ஹ்ரஸ்வத்துடன் நிபாதத்தால் மங்களகுணங்களின் சமூகமானது இவரிடத்தில் சமரசமாயிருக்கின்ற தென்னும் சொற்புணர்ச்சி யிலக்கணத்தை யநுசரித்து, ஒன்றுக்கொன்று சேரதனவாயுள்ள உதாரத்தன்மை, மிகுந்த மதுரத்தன்மை, விசேடமாயறியுந் தன்மை, நிரதிசயத்தன்மை, பொறுக்குந் தன்மை முதலிய நற்குணங்களின் பற்றுக்கோட்டிற்கு உபயோகியான எல்லா மங்களகுணங்களுக்கும் சமுத்திரம் போன்றவரென்னும் பொருளை வைத்துக்கொள்ளலாம்.

உலகத்திலுள்ள அசுபங்களுள் ஒன்றேனும் இவரிடத்தில் கிடையாது. பரமாத்மாவான இவர் மங்கள சொரூபராயிருக்கின்றமையால் எல்லாக் கலியாண குணங்களும் இவரிடத்திலிருக்கின்றன.

அன்றியும், பச்யக என்னும் பதமும், ஹிம்சியென்னும் பதமும், எழுத்துநிலை மாறுதலென்னும் விதிப்படி, கச்யப; சிம்ஹ: என முறையே ஆகுமாறுபோல, இச்சையென்னும் பொருளைத் தரும் வசதாதுவானது அக்கரங்களின் மாறுதலால் சிவ என்று ஆனதாக அறிந்து கொள்க.

வசதாதுவிற்கு இச்சையென்பது பொருளாகும். அந்தத் தாதுவுடன் பிரத்தியஞ் சேர்ந்து வஷ்டியென்றாகி, எல்லாவுயிர்களுடைய மங்களத்தை யிச்சிக்கிறார் என்னும் சொற்புணர்ச்சியிலக்கணத்தால், எல்லாவுயிர்களுக்கும் மங்களத்தைக் கோருகிறார் என்னும் பொருள் பெறப்படுகின்றது.

“எல்லாக் காரியங்களையுஞ் செய்வதில் நித்தியமாக விருத்தியை யுண்டுபண்ணுகின்றமையால் ஈசுவரன் சிவன் என எல்லோராலுங் கூறப்படுகின்றார்” என்னும் பொருளைத்தரும் சுலோகங்களால் உயிர்களுடைய மங்களத்தைக் கருதிக் கொண்டு எல்லாக் காரியங்களையுஞ் செய்கிறாரெனப் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

அன்றியும், மங்களமென்னும் பொருளைத் தரக்கூடிய சிவசப்தத்துடன், “தத்கரோதிததாசஷ்டே” (அதைச் செய்கிறார் அதைச் சொல்லுகிறார்) என்னும் பொருள் கொண்ட விதியால், அதைச்செய்கிறார் என்னுமர்த்தத்தில் ணிச்பிரத்தியயத்தைச் சேர்த்து, பசாத்யச் பிரத்தியயத்தையுஞ் சேர்த்து “ணேரனிடி” என்னும் சூத்திரவிதியால் ணிச்பிரத்தியயத்தை லோபஞ்செய்யின், “சிவம் கரோதிசர்வேஷாம்” என்னுஞ் சொற்புணர்ச்சியால் எல்லாவுயிர்களுக்கும் இதத்தைச் செய்கிறவர் என்னும் பொருளும் பெறப்படும்.

See Also  1000 Names Of Sri Garuda – Sahasranama Stotram In Tamil

“எல்லாத் தேவர்களும் அரக்கரும் என்னிடம் விரோதபாவத்தைப் பாராட்டாது சமமாகவே யிருக்கின்றனர். அதற்குக் காரணம் யாதெனின், யான் எல்லாவுயிர்களுக்கும் மங்களத்தைச் செய்பவனாக இருப்பதேயாம். ஆகையால் எனக்குச் சிவத்தன்மை சித்தித்தது” என்னும் பொருளையுடைய சுலோகத்தால் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

அல்லது, சிவசப்தம் உணாதிப் பிரகரணத்தில் படிக்கப்பட்டிருப்பது கொண்டு, செல்லுகிறது என்னும் பொருளைத் தரக்கூடிய ச்யைங் தாதுவுடன் வன்பிரத்தியயம் வந்து ஐகாரயகாரங்கள்லோபமாகி ச்யாய்யதே ப்ராப்யதே யென்னுஞ் சொற்புணர்ச்சி யிலக்கணத்தால் போகமோக்ஷங்களை விருப்புகிறவரால் பூசிக்கத் தகுந்தவரென்னும் பொருளையுங் கொள்ளலாம்.

“எவன் சிவபூஜை செய்கின்றானோ அவனுடைய வீட்டுவாசலில் மதமுடைய யானைளும், வாயுவேகத்தையொத்த வேகத்தையுடைய குதிரைகளும், பூரண சந்திரனையொத்த முகத்தையுடைய பெண்களும் இருக்கின்றனர். ஆகையால் அனைவரையுந் தள்ளிவிட்டு மங்களத்தைச் செய்கின்றவராயும், மேலானவராயும் தேதேனாயுமுள்ள சிவனொருவனே தியானஞ் செய்யப்படுபவன்” என்று கூறி அதர்வணவேதம் முடிவடைந்திருக்கின்றது. இதினாலும் பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

“இரண்டு அக்கரங்களையுடைய யாதொரு சொல்லான துவாக்கினாற் சொல்லப்பட்டு ஒரே முறையில் உயிர்களுடைய பாவங்களைப் போக்குகின்றதோ, அத்தகைய பரிசுத்தமான கீர்த்தியையுடையதாயும், கடக்கமுடியாத ஆணையை யுடையதாயுமிருக்கின்ற சிவசப்தத்திற்குரிய சிவனைச் சிவபாவனையின்றி நீர் வெறுக்கின்றீர்” என்பதனால், எல்லாப்பாவங்களையும் போக்குதற் பொருட்டுப்படிக்கப்பட்ட சிவசப்தத்திற்கு வாச்சியரானவர் எவரோ, அத்தகைய பிரசித்தரான சிவன் கூறப்படுகிறார்.

இவ்வாறு சிவசப்தத்தை யாராய்ந்துவிட்டு, இனி, சிவோதாதா என்றற்றொடக்கத்துச் சுலோகத்தின் பொருளையாராயத் தொடங்குகின்றார்.

“சிவோயஜதசர்வத்ர.” இதன் பொருள் – எல்லாவுலகங்களிலும் சிவனே தருமங்களுக்கு அதிகாரியாயிருக்குந் தன்மையுடனிருக்கின்றார். கன்மத்திற்கு வசப்பட்ட எல்லா ஜீவர்களுடைய பொரூபமான அவரே எல்லாவற்றையும் அடக்குபவர் என்பதாம்.

“சிவஸ்ஸர்வமிதம்ஜகத.” இதன்பொருள் – பூதபௌதிகரூபமான சடப் பிரபஞ்சங்களனைத்தின் சொரூபமான அவர், அவற்றை நியமனஞ் செய்பவராக இருக்கின்றார் என்பதாம்.

“போக்தா.” இதன்பொருள் – தன்னையடைந்தவர்களைக் காப்பவர் என்பதாம்.

“தாதா.” இதன்பொருள் – தன்னையடைந்தவர்களுக்கு மறதியி£ல் மகாபாவங்களாகிய விக்கினங்கள் ஏற்படின் அவற்றை நீக்குபவர் என்பதாம். சோதநேயென்னும் பொருளைத்தரும் தைப் என்னுந் தாதுவால் இப்பொருள் கிடைத்தது.

இந்த விசேடணங்களனைத்தும் சிவனிடத்தில் தன்னைத்தெரிவித்தலாகிய ஆத்மநிவேதனஞ் செய்யும் பொழுது அதற்கு அங்கமாக உபயோகப்படுகின்றன. எவ்வாறெனில், கட்டுப்படுபவனான பூசகனுக்கும் கட்டுப்டுத்தும் சிவனுக்கும் இன்றியமையாத நியம்ய நியாமகபாவரூபமான சரீரசரீரி பாவத்தால், சிவனைக் குறித்து நான் உன்னைச் சேர்ந்தவனாயிருக்கின்றேனென்னும் பூசகனுடைய அநுசந்தானமே ஆத்ம நிவேதனமாகும்.

“ஸோஹமேவ” என்றவிடத்தில், ஸோஹமென்பது, ஸ: அஹமெனப் பிரிக்கப்பட்டு, ஸ: என்னும் தத்சப்தத்தால் குறிக்கப்பட்ட சிவனிடத்தில், அஹம் சப்தத்தால் குறிக்கப்பட்ட தனக்குள்ள சரீரத்தன்மையும், அயோகவியவச்சேதத்தைப் போதிக்கும் ஏவகாரத்தால் கிடைத்த அதன் நிச்சயமும் அநுசந்தானவிடயரூபமான சுவாத்மநிவேதனத்தை நிர்ணயஞ் செய்கின்றன.

தன்னைத் தெரிவித்தலாகிய ஆத்மநிவேதனத்திற்கு ஐந்து அங்கள் உண்டு. அவையாவன:- அநுகூலஞ்செய்ய வேண்டுமென்றெண்ணுதல், பிரதிகூலத்தை நீக்குதல், தன்னைக்காப்பாற்றுவாரென்று நம்பிக்கை வைத்தல், காப்பவராயிருக்க வேண்டுமென்று பிரா£¢த்தித்தல், கார்ப்பண்ணியம் என்பன.

அவற்றுள், எல்லாவுயிர்களுக்கும் அநுகூலத்தைச் செய்வதும், பிரதிகூலத்தை விலக்குவதுமாகிய இரண்டு அங்கங்களையும், பூசகனைக் குறித்து எல்லா ஜீவவர்க்கங்களும், காப்பவரான சிவனுடைய சரீரம் என்பது விளக்குகின்றது. ஆகையால் பூசகன் எல்லாவுர்களிடத்தும் அரசனுடைய சரீரத்தில் வேலைக்காரன் போல் அநுகூலஞ்செய்து கொண்டிருக்க வேண்டும்; பிரதிகூலத்தை விலக்கவும் வேண்டுமெனப் பெறப்படுகின்றது. இதுபற்றியே வாயுசம்ஹிதையில் சிவனுடைய எட்டு மூர்த்திகளையும் நிரூபணஞ் செய்யும் சிரகரணத்தில், “பரமாத்மாவான சிவனுக்கு ஆன்மா எட்டாவது மூர்த்தியாகும். ஏனைய மூர்த்திகளை அந்த எட்டாவது மூர்த்தி வியாபித்திருக்கும். ஆகையால் உலகம் சிவசொரூபமாயிருக்கின்றது. சிவனை ஆராதித்தலானது எல்லாவுயிர்களுக்கும் உபகாரத்தைச் செய்ததாகவும் ஆகுமெனப் பெரியோர் கூறுகின்றனர். யாதானுமோருயிர்க்குக் கேடு செய்தால், அது அட்டமூர்த்தியான சிவனுக்குச் செய்ததாக ஆகும். இவ்விடயத்தில் சந்தேகமில்லை” யெனக் கூறப்பட்டிருக்கின்றது.

தன்னைக் காப்பாற்றுவாரென்று நம்பிக்கை வைத்தலாகிய மூன்றாவது அங்கமானது சுலோகத்திலுள்ள எல்லா விசேடணங்களாலும் நிரூபணஞ் செய்யப்பட்டது. எவ்வாறெனின், அஹமேவ என்னும் வாக்கியத்தால் குறிக்கப்பட்டதானாகிய சரீரமென்னும் பொருளானது, தன்னைக் காப்பாற்றுவாரென் றுண்டாகும் உறுதியை நிரூபணஞ் செய்கின்றது. எவன் தான் தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுமாட்டான். சிவசப்தத்தால் கூறப்பட்ட உறுதிக்கு விரோதிகளான விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்குக் காரணமான மலமில்லாமையும், உயிர்கள் அடைதற்குரிய எல்லாக் கல்யாண குணங்களானும் பிரகாசிக்கும் தன்மையும், எல்லாயுயிர்களுடைய நன்மையைக் கருதுந் தன்மையும், எல்லாவுயிர்களுக்கும் நன்மையைச் செய்யுந்தன்மையும், நன்மைக்கு விரோதியான எல்லாப் பாவங்களையும் நீக்குவதான சிவசப்தத்தின் வாச்சியத் தன்மையும் ஆகியயிவையனைத்தும் காப்பாற்றுவாரென் றுண்டாகும் உறுதியை நிரூபணஞ் செய்கின்றன.

“சிவோயஜதி ஸர்வத்ர சிவஸ்ஸர்வமிதம் ஜகத்” என்னும் இரண்டு விசேடணங்களாலும் கூறப்பட்ட சேதனா சேதன ரூபமான எல்லாப் பிரபஞ்சங்களையும் அடக்குவதான சர்வேசுவரத் சர்வேசுவரத் தன்மையும், காப்பாற்றுவாரென்றுண்டாகும் உறுதியை குறின்றது. எவ்வாறெனின், சர்வேசுவரர் தமது பத்தர்களின்விருப்பத்தை நிறைவேற்றுவதில் சமர்த்தராகயிருக்கின்றாரென்னுங் காரணத்தால் நம்பிக்கை செய்யப்படுதற்கு உரியவராக இருக்கின்றவா றுபற்றியென்க.

காப்பது என்னும் பொருளைத் தரும் புஜிதாதுவும், சுத்தி செய்தல் என்னும் பொருளைத் தரும் தைப்தாதுவும், அவர் இயல்பு என்னும் பொருளைத் தந்து, போக்தா தாதா என்னும் இரண்டு விசேடணங்களாக இருத்தலால், பத்தர்களைக்காப்பாற்றும் இயல்பும், பத்தர்களுக்கு மறதியாலுண்டான மகாபாதக முதலிய எல்லாப் பாவங்களையும் நீக்கும் இயல்பும் ஆகிய இவ்விரண்டும், தன்னைக் காப்பாற் றுவாரென்றுண்டாகும் நம்பிக்கையை நிரூபணஞ் செய்கின்றனவென்பது வெளிப்படை.

காப்பவரா யிருக்குந் தன்மையைப் பிரார்த்தித்த லென்னும் நான்காவது அங்கத்தையும் போக்தருத் தன்மையே நிரூபணஞ் செய்கின்றது. இயல்பாகவே காக்குந் தன்மை யுடையராயிருக்கும் பொழுது, தேவரீர் காப்பவராக இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கப்பட்டும் ஏன் காக்கமாட்டார்.

கார்ப்பண்யமென்னும் ஐந்தாவது அங்கமானது, பிறிதொரு தேவதைகளை விரும்பாமையாகும். ஏனையதேவர்களுக்கு நியமிக்குந் தன்மையும், பூசகனுக்கு நியமிக்கப்படுந் தன்மையும் இல்லாமை, து என்பதால் கூறப்பட்டது. ஆகையால் பிறிதொரு தேவதைகளை விரும்பாமை நிரூபணஞ் செய்யப்பட்டமை காண்க.

இவ்வாறு மூன்று சுளுகோதகங்களால் ஜபக்கிரியையினையும் ஆன்மாவையுஞ் சமர்ப்பித்த பின்னர், பஞ்சப் பிரமஷடங்க மந்திரங்களையும் மூலமந்திர ஜபத்தினளவில் பத்திலொருபங்கு ஜபித்து, அட்டபுஷ்பங்களாலும் மூன்று புஷ்பாஞ்சலிகளாலும் சிவனையருச்சித்து, சந்நிதியில் அஞ்சலிபந்தனத்துடன் தோத்திரஞ் செய்ய வேண்டும். பஞ்சாவரண தேவர்களின் தோத்திரங்கள் சுருதி ஸ்மிருதி புராணம் ஆகமமென்னுமிவற்றில் கூறப்பட்ட தோத்திரங்கள், பூருவாசிரியர்களால் செய்யப்பட்ட தோத்திரங்கள் என்னுமிவற்றுள் சத்திக்குத் தக்கவாறு யாதானுமொன்றால் தோத்திரஞ் செய்ய வேண்டும். தன்னால் செய்யப்பட்ட தோத்திரம் வேதத்திற்குச் சமமென்பது பௌராணிகரது கொள்கை.