Sivarchana Chandrikai – Praarthanai In Tamil

॥ சிவார்ச்சனா சந்திரிகை – பிரார்த்தனை ॥

ஸ்ரீ அப்பைய தீக்ஷிதரவர்கள் செய்தருளிய சிவார்ச்சனா சந்திரிகை
பிரார்த்தனை

பின்னர், சிவபெருமானிடத்திற்குவந்து அட்ட புஷ்பங்களால் சிவனைப் பூசித்து, விசேடார்க்கியங்கொடுத்து, நமஸ்கரித்து விருப்பமான பிரார்த்தனையைச் செய்து, ஓ பிரபோ! யான் அறியாமையால் குறைவாகவோ அதிகமாகவோ கிரியைகளைச் செய்திருப்பினும், அவற்றைத் தேவரீர் ஏற்றுக் கிரியை பூர்த்தியானதாகவே அருள்புரிய வேண்டும்.

ஓ பக்தர்களிடத்து அன்புள்ளவதே! என்னால் இரவும் பகலும் அநேக அபராதங்கள் செய்யப்படுகின்றன. எனை அடிமையாகப் பாவித்து அவற்றைப் பொறுத்தருளல் வேண்டும்.

ஓ சுவாமின்! சிறியனாகவும், அடிமையாகவும், அழுக்கடைந்த புத்தியையுடையவனாகவுமிருக்கிற யான் ஏதே பத்தியினால் தேவரீரைச் சிரமப்டுத்தி விட்டேன்; அதனைப் பொறுத்தருளல் வேண்டும் என்றிவ்வாறு விஞ்ஞாபனஞ் செய்ய வேண்டும்.

See Also  Narayaniyam Pancapancasattamadasakam In Tamil – Narayaneyam Dasakam 55