Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai In Tamil

Thanthaikku Guruvaagi Thanthitta Swamimalai in Tamil:

॥ தந்தைக்கு குருவாகி ॥
தந்தைக்கு குருவாகி தந்திட்ட சுவாமிமலை
ஓம் எனும் பிரணவத்திற்கு உண்மை

தத்துவப்பொருளுரைத்து
கருணை வடிவானவா சுவாமிநாதா
சரணம் சரணம் முருகா சரணம் (தந்தை)

பக்திச்சுவை தித்திடும் தனிஉரு சக்திச் சிவ
முத்துக்குமரனையே வணங்கிடுவோம்
முத்தக்கொரு வித்தாவான் முருகன் முதல் பொருளாய்
நின்கின்ற அழகனையே நினைத்திடுவோம்
நினைத்தாலும் அழைத்தாலும் நீ
துணையாகி அருள் தரவே வருவாயப்பா
உலகம் வலம் வந்த உமையாள் மைந்தனே
சுவாமி நாதனே சரணமய்யா (தந்தை)

திங்கள் முகம் பொங்கிடநல்பொழிவுடன்
தோகையில் வாகனமதில் நீயே வா வேல்முருகா
எங்கும் வளம் பெருகிட என்றென்றும்
ஏழிசையாய்கேட்கின்ற இசைத்தமிழே மால்மருகா
பொறிவண்டு சுருதி கூட்டிடும் திருவேரகம் உரையும் திருமாலே
அறிவில் தெழிவும் அஞ்சாத உறதியும் தரவே வருவாய் முருகய்யா (தந்தை)

See Also  Viswaroopamidivo In Telugu