Thedukindra Kangalukkul Oodi Varum Swamy In Tamil

॥ Thedukindra Kangalukkul Oodi Varum Swamy Tamil Lyrics ॥

தேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி
திருவிளக்கின் ஒளியினிலே குடியிருக்கும் சுவாமி

வாடுகின்ற‌ ஏழைகளின் வறுமை தீர்க்கும் சுவாமி
வஞ்சமில்லா நல்லவர்க்கு அருள்புரியும் சுவாமி

ஐயப்ப‌ சுவாமி அருள் புரி சுவாமி
கண்ணனும் நீ கணபதி நீ கந்தனும் நீயே எங்கள்
காவல் தெய்வம் பரமசிவன் விஷ்ணுவும் நீயே
அண்டமெல்லாம் காத்தருளும் சக்தியும் நீயே – என்மேல்
அன்பு வைத்து நதிவரைக்கும் ஓடிவந்தாயே
ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள் புரி சுவாமி

தந்தையுண்டு அன்னையுண்டு உந்தன் வடிவிலே
அன்புகொண்டு த‌ந்தைக்கவன் செய்யும் பணியிலே – நாங்கள்
ஆண்டுதோறும் வந்து நிற்போம் உந்தன் நிழலிலே
ஐயப்ப‌ சுவாமி இன்னும் அருள்புரி சுவாமி

See Also  108 Names Of Sri Dhumavati In Tamil