Thiruparankundrathil Nee Sirithal Muruga In Tamil

॥ Thiruparankundrathil Nee Sirithal Muruga Tamil Lyrics ॥

॥ திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ॥
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்!

பழநியிலே இருக்கும் கந்தப் பழம் நீ
பார்வையிலே கொடுக்கும் அன்புப் பழம்
பழமுதிர்ச் சோலையில் முதிர்ந்த பழம்
பக்திப் பசியோடு வருவோர்க்கு ஞானப் பழம்!
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா
திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்
திருச் செந்தூரிலே வேலாடும்
திருப்புகழ் பாடியே கடலாடும்!

சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு உன்
சிங்கார மயிலாடத் தோட்டம் உண்டு
உனக்கான மனக்கோயில் கொஞ்சமில்லை அங்கு உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை! (திருப்பரங்குன்றத்தில்)

See Also  108 Murugan Potri – முருகன் 108 போற்றி