Ullam Urugudaiya Murugaa In Tamil

॥ Ullam Urugudaiya Murugaa Tamil Lyrics ॥

॥ உள்ளம் உருகுதய்யா முருகா ॥
உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதப்பா முருகா (உள்ளம் உருகுதய்யா)

பாடிப் பரவசமாய் உனையே பார்த்திடத் தோணுதய்யா
ஆடும் மயிலேரி முருகா ஓடி வருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா)

(பந்த)பாசம் அகன்றதய்யா உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா
ஈசன் திருமகனே எந்தன் ஈனம் மறைந்ததப்பா (உள்ளம் உருகுதய்யா)

ஆறு திருமுகமும் (உன்) அருளை வாரி வழங்குதய்யா
வீரமிகு தோளும் கடம்பும் வெற்றி முழக்குதப்பா (உள்ளம் உருகுதய்யா)

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா
பாவியென்றிகழாமல் எனக்குன் பதமலர் தருவாயப்பா (உள்ளம் உருகுதய்யா)

– Chant Stotra in Other Languages –

Murugan Song » Ullam Urugudaiya Murugaa in English

See Also  Shri Dandapani Pancharatnam In Tamil