Uthiththanggae Olivilakkaaka Uththiranatchaththiram In Tamil

॥ உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் Tamil Lyrics ॥

॥ உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் ॥

உதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் சாமியே சரணம்
தெறித்த ஒளியில் திரு விளக்காக தெய்வம் உன் அம்சம் ஐயப்ப சரணம்
குவித்தகரங்கள் கேட்கிற வரங்கள் கொடுக்கும் அருளம்சம் (உதித்த)

கலியுகவரதன் காலடிசேர்ந்தால் காணும் பேரின்பம்
தெளிவுறும் மனது தேறிடும் பொழுது தேய்ந்திடும் துன்பம்
மலரடி தொழுதேன் மனம் விட்டு அழுதேன்
மணிகண்டன் சன்னதியில் (உதித்த)

இருமுடி ஏந்தி திருவடி தேடி வரவேனோ ஐயா
கரிமலை மேலே வரும் வழிபார்த்து காத்திடுமென் ஐயா
தேக பலம்தா பாதபலம்தா
தேடிவரும் நேரம் (உதித்த)

See Also  Shiva Niranjanam In Tamil